விசாகப்பட்டினத்தில் ‘சிங்கம் 3!’

ஹரி இயக்கத்தில் ‘ஆறு’, ‘வேல்’ என அடுத்தடுத்த இரண்டு படங்களை கொடுத்த சூர்யா, ‘சிங்கம்’ படம் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை சுவைத்தார். அதன் 2ம் பாகமும் ஹிட்டானது. இந்நிலையில், தற்போது அதன் 3ம் பாகமான ‘எஸ் 3’ விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. 2017ம் ஆண்டில் பொங்கல் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மாவீரன் கிட்டு’வானார் விஷ்ணு!

விஷ்ணு விஷால்-–ஸ்ரீதிவ்யா-–சுசீந்திரன் கூட்டணியில் ‘ஜீவா’ படம் கடந்த வருடம் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்திருக்கும் இப்படத்தின் தலைப்பை ‘மாவீரன் கிட்டு’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

அக்டோபர் 7ம் தேதி ‘ரெமோ!’

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ரெமோ’. இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் மூலமாக கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார்

‘கிருமி’ கதிர் நடிக்கும் படம்!

சமீபத்தில் ரிலீசாகி பத்திரிகைகளின் பாராட்டுக்களுடன் ஓரளவுக்கு ஓடிய படம் ‘கிருமி’. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த கதிர் அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘சத்ரு’ என்று பெயரிட்டுள்ளனர். இயக்குனர் ராதாமோகனிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த நவீன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஸ்ரேயா வந்துட்டாரு!

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார் ஸ்ரேயா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர். அதில் ஒரு நாயகியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு ஆல்பத்தில் ஹிப் ஹாப்!

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்து, வரிகள் எழுதி, பாடி நடித்துள்ள இந்த ஆல்பம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆல்பம் வெளியாகி 50 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 20 லட்சம் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது.

அர்ஜுனின் ‘நிபுணன்!’

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, மலையாளத்தில் ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதனின் இயக்கத்தில் அர்ஜுன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி, சுமன், சுஹாசினி, ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் நடிக்கும் படத்திற்கு ‘நிபுணன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கிராமத்து படத்தில் மாதவன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் ரீ–என்ட்ரி ஆனார் மாதவன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாக்க இருக்கிறார்கள்.

மூன்றாவது முறை கூட்டணி!

இயக்குனர் ஏ.எல். விஜய் தற்போது பிரபுதேவாவை வைத்து ‘தேவி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இதற்கு முன் ‘தாம் தூம்’, ‘எங்கேயும் காதல்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மூன்றாவது முறையாக புது படம் மூலம் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணையவுள்ளார்.

விஜய் படத்தில் புதிய குழந்தை நட்சத்திரம்!

விஜய் தற்போது தனது 60-வது படமாக நடித்து வரும் பரதன் இயக்கும் புதிய படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்து வருகிறது. அந்த குழந்தையின் பெயர் மோனிகா சிவா. இவள் ‘சங்கு சக்கரம்’, ‘கட்டப்பாவை காணோம்’, ஜெய் நடிக்கும் புதிய படம், சித்தார்த் நடிக்கும் பெயரிடப்படாத படம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறாள்.