மேஷம்

செப்டம்பர் 26, 2021

இன்று குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். எதிர்ப்புகள் விலகும். தொழில் சார்ந்த முன்னேற்றம் பாராட்டும் வகையில் இருக்கும். கடன் சுமை குறையும். இறைவழிபாடு மன நிம்மதி தரும்.

ரிஷபம்

செப்டம்பர் 26, 2021

இன்று தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றமாக இருக்கும். வளர்ப்பு பிராணிகளால் மகிழ்ச்சியடைவீர்கள். குழந்தைகளால் பெருமைப்படும் வகையில் அவர்கள் செயல்பாடு இருக்கும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை மன நிம்மதி தரும். கடவுள் பக்தி மன மகிழ்வை தரும்.

மிதுனம்

செப்டம்பர் 26, 2021

இன்று உங்கள் சிரமங்கள் குறையும். சுகசெளக்யம் மிகுந்திருக்கும். விருந்தினர் வருகையால் இல்லம் சிறக்கும். சுகபோஜனம், உறவினர்களுடன் சந்தோஷமான சூழல் இருக்கும். செய்யும் தொழிலில் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்கும். தர்மசிந்தனை மன நிம்மதி தரும் வகையில் இருக்கும்.

கடகம்

செப்டம்பர் 26, 2021

இன்று உங்கள் செயல்பாடுகளில் புத்திசாலித்தனம் மிகுந்திருக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். முன்கோபம் வரும். தவிர்ப்பது நலம். குடும்பப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். இறைவழிபாடு மன நிம்மதி தரும். பயண காரியம் அனுகூலம் தரும்.

சிம்மம்

செப்டம்பர் 26, 2021

இன்று முற்பகுதியில் சிரமங்கள் அலைச்சல் இருந்தாலும், பிற்பகுதியில் சுகவிருத்தி, நோய் தீருதல், எதிர்ப்பு விலகல் என நற்பலன்கள் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். முன்னெச்சரிக்கை அவசியம் தேவை.

கன்னி

செப்டம்பர் 26, 2021

இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலை தாராளமாக இருக்கும். சுகபோகம் மிகுந்திருக்கும். குழந்தை பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். குடும்பப் பணிகளில் சிரமம் இருக்கும். அக்கம்பக்கத்தில் கவனம் தேவை. ஆன்மிக ஈடுபாடு மனநிம்மதி தரும். வளர்ப்பு பிராணிகளால் மகிழ்ச்சி கூடும். கடவுள் வழிபாடு மன நிம்மதி தரும்

துலாம்

செப்டம்பர் 26, 2021

இன்று உங்களுக்கு அத்தியாவசியத் தேவைகளில் நெருக்கடி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தேக ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்னைகள் வரும். செய்யும் தொழிலில் பாராட்டு பெறும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். ஆன்மிக சிந்தனை நன்மை தரும்.

விருச்சிகம்

செப்டம்பர் 26, 2021

சிக்கலான பிரச்னையில் இன்று நீங்கள் எடுக்கும் முடிவு வெற்றி பெறும். முன்கோபத்தினால் உங்கள் நெருக்கமானவர்களின் மன வருத்தம் உங்களுக்கு மனசஞ்சலம் தரும். புதிய விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். நீண்டநாள் குறை இன்று தீரும்.

தனுசு

செப்டம்பர் 26, 2021

இன்று உங்கள் செயல்பாடுகளில் தடுமாற்றம் இருக்கும். வீண் பயம் மனசஞ்சலம் தரும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் பாராட்டு பெறும் வகையில் இருக்கும். புதிய முயற்சிகள் தள்ளிப் போகும். எதிரிகள் தொல்லை மன வருத்தம் தரும்.

மகரம்

செப்டம்பர் 26, 2021

இன்று எதிர்பாராத செலவுகள் சிரமம் தரும். தொழில் சார்ந்த விஷயங்கள் சுமாராகவே இருக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாதீர்கள், பிரச்னை வரும். குடும்ப விஷயங்களில் சுமுகமான சூழல் இருக்கும். பயண விஷயங்களில் முன்னெச்சரிக்கை தேவை.

கும்பம்

செப்டம்பர் 26, 2021

உங்கள் விடாமுயற்சிக்கு இன்று நற்பலன்கள் கிட்டும். தொழில் சார்ந்த விஷயங்கள் முன்னேற்றமாக இருக்கும். வழக்குகளில் அனுகூலமான சூழ்நிலை வரும். மகன், மகள் மூலம் சந்தோஷமான மனநிலை வரும். பயண அலைச்சல் அதிகமிருக்கும். தேக ஆரோக்யத்தில் சிறு சிறு தொல்லை வரும்.

மீனம்

செப்டம்பர் 26, 2021

இன்று வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். முக்கியமான விஷயத்தில் காரியத்தடை வரும். பணவரவுகள் உங்கள் சிரமங்கள் குறையும் வகையில் இருக்கும். சுகபோஜனம் திருப்தி தரும் வகையில் இருக்கும். வாகன போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவைப்படும்.

Trending Now: