நிக­ழும் விளம்பி ஆண்டு மாசி மாதம் 1ம் தேதி 13.02.2019 புதன் கிழ­மை­யன்று வளர்­பிறை அஷ்­டமி திதி கார்த்­திகை நட்­சத்­தி­ரம் அன்று தற்­பொ­ழுது கட­கத்­தில் இருக்­கும் ராகு புனர்­பூ­சம் நட்­சத்­தி­ரம் 3ம் பாதத்­தில் பெயர்ச்­சி­யாகி மிதுன ராசிக்கு செல்­கி­றார். மகர ராசி­யில் இருக்­கும் கேது உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் பெயர்ச்­சி­யாகி தனுசு ராசிக்கு செல்­கி­றார். இதில் மேஷம், சிம்­மம், மக­ரம் ஆகிய ராசி­க­ளுக்கு ராகு சுப ஸ்தானம் பெற்று ஒன்­றரை ஆண்­டு­கள் இந்த ராசி­நே­யர்­க­ளுக்கு நற்­ப­லன்­கள் வழங்­கு­வார். அதே­போல் கட­கம், துலாம், கும்­பம், மீனம் ஆகிய ராசி­க­ளுக்கு கேது சுபஸ்­தா­னம் பெற்று ஒன்­றரை ஆண்­டு­கள் இந்த ராசி­நே­யர்­க­ளுக்கு நற்­ப­லன்­கள் வழங்­கு­வார். 13.02.2019 அன்று பெயர்ச்­சி­யா­கும் ராகு, கேது முறையே மிது­னம், தனுசு ராசி­க­ளுக்­குள் சஞ்­ச­ரிக்­கி­றது. அதில் ரிஷ­பம், மிது­னம், கன்னி, விருச்­சி­கம், தனுசு ஆகிய ராசிக்­கா­ரர்­க­ளுக்கு இரண்டு கிர­கங்­க­ளும் சாத­க­மில்­லா­த­தால் – விநா­ய­கர், துர்க்­கை­யம்­மன் வழி­பாடு செய்­வது சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். இனி பன்­னி­ரெண்டு ராசிக்­கா­ரர்­க­ளுக்­கும் ராகு, கேது பெயர்ச்சி பலன்­களை தெரிந்து கொள்­ளுங்­கள்.


மேஷம்

இது­வரை கடக ராசி­யில் நான்­கா­மிட சஞ்­சா­ரத்­தில் இருந்த ராகு, புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் மிதுன ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். அதே­போல் மக­ர­ராசி பத்­தா­மி­டத்­தில் சஞ்­ச­ரித்த கேது உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். இது உங்­க­ளுக்கு ஒன்­ப­தா­மி­டம்.

13.02.2019 முதல் ராகு உங்­கள் ராசிக்கு நற்­ப­லன்­களை வழங்­கு­வார். நாற்­கால் பிரா­ணி­கள் வளர்ப்­ப­வர்­க­ளுக்கு லாப­க­ர­மான சூழ்­நிலை தொட­ரும். கால்­நடை விருத்­தி­யா­கும். வளர்ப்பு பிரா­ணி­கள் செல்­லப்­பி­ரா­ணி­கள் வளர்ப்­ப­வர்­க­ளுக்கு புதி­தாக வளர்ப்பு பிரா­ணி­கள் சேரும். மகிழ்ச்சி தரும். கடன் பிரச்­னை­கள் தீரும். சுக­ஜீ­வ­னம் நிம்­மதி தரும். தேக ஆரோக்­யம் முன்­னேற்­ற­மாக இருக்­கும். உங்­கள் முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். ஆன்­மிக சிந்­தனை நற்­ப­லன்­கள் தரும். 20.08.2019க்கு பிறகு ராகு திரு­வா­திரை நட்­சத்­திர சஞ்­சா­ரம் சிறப்­பாக இருக்­கும். சுய­பாத சஞ்­சா­ரம் – தன்­னம்­பிக்கை அதி­கம் கொடுக்­கும். உழைக்­கும் திறனை அதி­க­ரிக்­கும். அர­சி­யல் சார்ந்­த­வர்­க­ளுக்கு நல்ல முன்­னேற்­றம் வரும். பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் மேன்­மை­யாக இருக்­கும். அதன் பிறகு 28.04.2020ல் ராகு மிரு­க­சீ­ரிட நட்­சத்­திர பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது செவ்­வாய் பாத சஞ்­சா­ரம் என்­ப­தால் பூமி சார்ந்த விஷ­யங்­கள் அனு­கூ­லம் ஆகும். வீடு கட்­டு­வது, நிலம் வாங்­கு­வது போன்ற விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். நிர்­வா­கம் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிர்­வா­கத்­தி­றன் அதி­க­ரிக்­கும். பண­வ­ர­வு­கள் அதி­க­ரிக்­கும். பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். ராகு அனு­கூ­லம் கேது­வின் தனுசு ராசி சஞ்­சா­ரம் ஒன்­ப­தா­மிட சஞ்­சா­ரம் என்­ப­தால் கொஞ்­சம் கவ­ன­மாக இருக்க வேண்­டும். முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை. கைப்­பொ­ருளை மறந்து விடு­தல், தொலைத்­தல் என சிர­மங்­கள் இருக்­கும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவைப்­ப­டும். காரி­யத்­தடை வீண் அலைச்­சல் போன்ற சிர­மங்­கள் இருக்­கும்.

17.04.2019 அன்று கேது பூரா­டம் 4ம் பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது பொரு­ளா­தார சூழ்­நி­லை­க­ளில் சிர­மங்­கள் வரும். பண­வ­ர­வு­கள் கால­தா­ம­தப்­ப­டும். சில­ருக்கு காதல் சம்­பந்­தப்­பட்ட பிரச்­னை­க­ளில் சிக்­கல் வரும்.

இந்­த­நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு மூலம் நட்­சத்­தி­ரம் காலில் சஞ்­ச­ரிக்­கும் கேது­வுக்கு சுய­பாத சஞ்­சா­ரம் என்­ப­தால் கடின உழைப்பு, போட்­டி­கள், வழக்கு வியாஜ்­ஜி ­யங்­க­ளில் சிர­மம் இருக்­கும். விநா­ய­கர் வழி­பாடு இந்த சிர­மங்­களை குறைக்­கும். 30.08.2020 வரை இந்த சூழ்­நிலை நீடிக்­கும். விநா­ய­கர் வழி­பாடு, பெரு­மாள் வழி­பாடு செய்­வது உத்­த­மம்.


ரிஷபம்

இது­வரை கடக ராசி­யில் மூன்­றா­மிட சஞ்­சா­ரத்­தில் இருந்த ராகு – புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் இரண்­டா­மி­டத்­தில் மிதுன ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். அதே போல் மக­ர­ராசி 9ம் இடத்­தில் சஞ்­ச­ரித்த கேது உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். இது உங்­க­ளுக்கு எட்­டா­மி­டம் ஏற்­க­னவே எட்­டா­மிட சனி­யும் உள்­ளது. எனவே நீங்­கள் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும். பொறுமை அவ­சி­யம் தேவை.

13.02.2019 முதல் ராகு உங்­கள் ராசிக்கு இரண்­டா­மி­டத்­தில் இருந்து உங்­க­ளுக்கு சிரம பலன்­களை தரு­வார். இந்த கால­கட்­டத்­தில் திரு­ட­ரால் பயம், அக்னி சம்­பந்­தப்­பட்ட அபா­யம், எதி­ரி­க­ளால் தொல்லை, முன்­கோ­பம், போன்ற சிரம பலன்­கள் இருக்­கும். பொறு­மை­யு­டன் சூழ்­நி­லையை அனு­ச­ரிப்­பது உத்­த­மம்.

20.08.2019க்கு பிறகு ராகு திரு­வா­திரை நட்­சத்­திர சஞ்­சா­ரம் ஓர­ளவு நன்­றாக இருக்­கும். சுய­பாத சஞ்­சா­ரம் என்­ப­தால் தன்­னம்­பிக்கை அதி­கம் இருக்­கும். கோபத்தை குறைத்து, பேச்சு சாதூர்­யத்தை கொடுக்­கும். அர­சி­யல் சார்ந்­த­வர்­க­ளுக்கு ஓர­ளவு முன்­னேற்­ற­மாக இருக்­கும். அதன் பிறகு 28.04.2020ல் ராகு மிரு­க­சீ­ரிட நட்­சத்­திர பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது செவ்­வாய் பாத சஞ்­சா­ரம் என்­ப­தால் பூமி சார்ந்த விஷ­யங்­க­ளில் எதிர்­பா­ராத சிர­மங்­கள் வரும். நிர்­வா­கம் சம்­பந்­தப்­பட்ட துறை­க­ளில் சிர­மங்­கள் இடை­யூ­று­கள் அதி­க­ரிக்­கும். ராகு சஞ்­சா­ரம் சாத­க­மற்ற சூழல் என்­ப­தால் செவ்­வாய்­கி­ழமை ராகு காலத்­தில் துர்க்­கை­யம்­ம ­னுக்கு எலு­மிச்சை விளக்­கில் நெய் தீபம் ஏற்றி வழி­ப­டு­வது துர்க்­கை­யம்­மன் வழி­பாடு சிரம பரி­கா­ர­மாக இருக்­கும். கேது­வின் தனுசு ராசி சஞ்­சா­ரம் எட்­டா­மிட சஞ்­சா­ரம் என்­ப­தால் மிகுந்த கவ­ன­மாக இருக்க வேண்­டும். கார­ணம் – சனி­யும் அஷ்­டம ஸ்தானம். எனவே குடும்­பத்­தில் வாக்­கு­வா­தம், மனக்­கு­ழப்­பம், காயம்­ப­டு­தல், பித்த உபாதை, ேதக ஆரோக்­யக்­குறை என சிர­மங்­கள் இருக்­கும். காரி­யத்­தடை, வீண் அலைச்­சல் என சிர­மங்­கள் இருக்­கும். 17.04.2019 அன்று கேது பூரா­டம் 4ம் பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது பொரு­ளா­தார சூழ்­நி­லை­யில் சிர­மம் – பணம் கொடுக்­கல் வாங்­க­லில் சிர­மம். முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை.

இந்த நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு மூலம் நட்­சத்­தி­ரம் பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது சுய­சா­ரம் என்­ப­தா­லும் குரு­சேர்க்கை என்­ப­தா­லும் பொரு­ளா­தார முன்­னேற்­றம் வரும். சுப­கா­ரிய அனு­கூ­ல­மா­கும். விநா­ய­கர் வழி­பாடு இந்த சிர­மங்­களை குறைக்­கும். 31.08.2020 வரை இந்த சூழ்­நிலை நீடிக்­கும். ரிஷப ராசிக்­கா­ரர்­கள் துர்க்­கை­யம்­மன் வழி­பாடு, விநா­ய­கர் வழி­பாடு, பெரு­மாள் வழி­பாடு செய்­வது உத்­த­மம்.


மிதுனம்

இது­வரை கடக ராசி­யில் இரண்­டா­மிட சஞ்­சா­ரத்­தில் இருந்த ராகு புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் மிதுன ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். அதே போல் – மகர ராசி எட்­டா­மி­டத்­தில் சஞ்­ச­ரித்த கேது – உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு யெர்ச்­சி­யா­கி­றார். இது உங்­க­ளுக்கு ஏழா­மி­டம் – ஏற்­க­னவே சனி ஏழா­மி­டத்­தில் இருக்­கி­றார். எனவே குடும்­பப் பிரச்­னை­க­ளில் நீங்­கள் பொறு­மை­யு­டன் இருக்க வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது.

13.02.2019 முதல் ராகு உங்­கள் ராசி­யில் இருந்து உங்­க­ளுக்கு சிரம பலன்­களை தரு­வார். இந்த கால­கட்­டத்­தில் அக்னி சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­க­ளில் அபா­யம். அய­லூர் செல்­லும் நிலை, உற­வி­னர்­கள் பகை – தேக ஆரோக்­யக்­குறை என சிர­மங்­கள் இருக்­கும். பொறு­மை­யு­டன் சூழ்­நி­லையை அனு­ச­ரிப்­பது உத்­த­மம். 20.08.2019க்கு பிறகு ராகு திரு­வா­திரை நட்­சத்­திர பாத சஞ்­சா­ரம் ஓர­ளவு சிர­மங்­கள் குறை­யும். சுய­பாத சஞ்­சா­ரம் என்­ப­தால் தன்­னம்­பிக்கை உங்­க­ளுக்கு அதி­கம் இருக்­கும். தேக ஆரோக்ய முன்­னேற்­றம் வரும். எலக்ட்­ரா­னிக்ஸ் பொருட்­கள் வாங்­கு­வ­தில் ஈடு­பாடு அதி­கம் வரும். பண­வ­ர­வு­கள் எதிர்­பார்த்­தது போல் இருக்­கும். அதன் பிறகு 28.04.2020ல் ராகு மிரு­க­சீ­ரிட நட்­சத்­திர பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது செவ்­வாய் பாத சரம் என்­ப­தால் – பூமி சார்ந்த விஷ­யங்­க­ளில் சிர­மங்­கள் வரும். நிர்­வாக சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­க­ளில் சிர­மம் வரும். பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். ராகு சஞ்­சா­ரம் சாத­க­மற்ற சூழ்­நி­லை­யில் இருப்­ப­தால் செவ்­வாய்­கி­ழமை ராகு காலத்­தில் துர்க்­கை­யம்­மன் வழி­பாடு – சிர­மப்­ப­ரி­கா­ர­மாக இருக்­கும். கேது­வின் தனுசு ராசி சஞ்­சா­ரம் ஏழா­மி­டம் என்­ப­தால் கூட்­டா­ளி­க­ளு­டன் மனக்­க­சப்பு, தூர­தேச பயண அலைச்­சல், காதல் சம்­பந்­தப்­பட்ட பிரச்­னை­கள், எதி­ரி­க­ளால் தொல்லை என சிர­மங்­கள் இருக்­கும்.

17.04.2019 வரை இந்த சூழ்­நிலை நீடிக்­கும். அதன்­பி­றகு கேது பூரா­டம் 4ம் பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும்­பொ­ழுது பொரு­ளா­தார சூழ்­நி­லை­க­ளில் சிர­மம் வரும். வர­வுக்கு ஏற்ப செல­வு­க­ளும் வரும். குடும்­பத் தேவை­கள் பூர்த்­தி­யா­கும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன் தரும். இந்த நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு மூலம் நட்­சத்­தி­ரத்­தின் பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் கேது­வுக்கு சுய­பாத சஞ்­சா­ரம் என்­ப­தால் குடும்ப பணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். குடும்­பத் தேவை­கள் அதி­க­ரிக்­கும். தேக ஆரோக்­யக்­குறை சிர­மம் தரும்.

கூட்­டா­ளி­க­ளு­டன் மனக்­க­சப்பு, இருக்­கும். குடும்­பத்­தில் வீண்­வாக்­கு­வா­தங்­களை தவிர்ப்­பது உத்­த­மம். விநா­ய­கர் வழி­பாடு இந்த சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும்.

30.08.2020 வரை இந்த சூழ்­நிலை நீடிக்­கும். மிதுன ராசிக்­கா­ரர்­கள் துர்க்­கை­யம்­மன் வழி­பாடு விநா­ய­கர் வழி­பாடு, பெரு­மாள் வழி­பாடு செய்­வது உத்­த­மம்.


கடகம்

இது­வரை ராசி­யில் சஞ்­ச­ரித்த ராகு, புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் பெயர்ச்­சி­யாகி மிதுன ராசி சஞ்­சா­ரம் செல்­கி­றார். இது உங்­க­ளுக்கு பன்­னி­ரெண்­டா­மிட சஞ்­சா­ரம். அதே­பால் மகர ராசி 7 இடத்­தில் சஞ்­ச­ரித்த கேது உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். இது உங்­க­ளுக்கு ஆறா­மி­டம். ஏற்­க­னவே சனி ஆறா­மி­டத்­தில் இருப்­ப­தால் உங்­க­ளுக்கு ஆறா­மிட நற்­ப­லன்­கள் இரட்­டிப்­பா­கும். கடன் பிரச்­னை­கள் தீரு­தல், பூமி சார்ந்த லாபம், தங்­கம், செம்பு போன்ற பொருள் சேர்க்­கை­கள். விரோ­தி­களை வெல்­லு­தல், நீண்­ட­கால கடன்­களை தீர்த்­தல், நோய் மட்­டுப்­ப­டு­தல் – ஆரோக்ய முன்­னேற்­றம் வழக்கு, வியாஜ்­ஜி­ யங்­க­ளில் வெற்றி என நற்­ப­லன்­கள் நீடிக்­கும்.

13.02.2019 முதல் ராகு உங்­கள் ராசிக்கு சிரம பலன்­களை தரு­வார். விரை­யஸ்­தா­னம் என்­ப­தால் தூக்­க­மின்மை, மன வருத்­தம், கவலை, பண விர­யம், வீண் செலவு தூர­தேச பய­ணம் என சிரம பலன்­கள் இருக்­கும். 20.08.2019க்கு பிறகு ராகு, திரு­வா­திரை நட்­சத்­திர சஞ்­சா­ரம் – சுய­பாத சஞ்­சா­ரம் என்­ப­தால் தன்­னம்­பிக்கை அதி­க­ரிக்­கும். உழைக்­கும் திறன் கூடும். அர­சி­யல் சார்ந்­த­வர்­க­ளுக்கு எதிர்­பா­ராத சிர­மங்­கள் வரும். இந்த சூழ்­நிலை 28.04.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு மிருக சீரி­டம் நட்­சத்­திர பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும். செவ்­வாய் சாரம் என்­ப­தால் பண­வி­ர­யம், கண் சம்­பந்­தப்­பட்ட உபாதை, பித்த உபாதை, பூமி சார்ந்த விஷ­யங்­க­ளில் வீண் பிரச்­னை­கள் என சூழ்­நி­லை­கள் இருக்­கும். எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் ரிப்­பேர் செல­வி­னங்­கள் என சிரம சூழ்­நி­லை­கள் வரும். ராகு­வின் சிரம சூழ்­நிலை குறைய செவ்­வாய்­கி­ழமை ராகு காலத்­தில் துர்க்­கை­யம்­மன் வழி­பாடு செய்­வது சிர­மப்­ப­ரி­கா­ர­ மா­கும்.கேது­வின் தனுசு ராசி சஞ்­சா­ரப் பலன் – முற்­ப­கு­தி­யில் நற்­ப­லன்­கள் மிகுந்­தி­ருக்­கும்.

17.04.2019 அன்று கேது பூரா­டம் 4ம் பாதத்­தில், சஞ்­ச­ரிக்­கும் பொழுது பொரு­ளா­தார முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். எதிர்ப்­பு­கள் வில­கும், வழக்கு வியாஜ்­ஜி­யங்­க­ளில் வெற்றி கிட்­டும். கடன் பிரச்­னை­கள் தீரும். முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை. கைப்­பொ­ருளை மறந்து விடு­தல், தொலைத்­தல் என சிர­மங்­கள் இருக்­கும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவைப்­ப­டும். காரி­யத்­தடை வீண் அலைச்­சல் போன்ற சிர­மங்­கள் இருக்­கும். எதிர்­பா­ராத பண­வ­ரவு உங்­கள் சிர­மங்­களை குறைக்­கும்.

இந்த நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு மூலம் நட்­சத்­தி­ரம் காலில் சஞ்­ச­ரிக்­கும் கேது­வுக்கு சுய­பாத சஞ்­சா­ரம் என்­ப­தால், தன்­னம்­பிக்கை, விடா­மு­யற்சி வழக்கு வியாஜ்­ஜி­யங்­ க­ளில் வெற்றி எதிர்­பா­ராத வர­வி­னங்­கள் என நற்­ப­லன்­கள் மிகுந்­தி­ருக்­கும். துர்க்­கை­யம்­மன் வழி­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும்.


சிம்மம்

இது­வரை பன்­னி­ரெண்­டாம் இடத்­தில் சஞ்­ச­ரித்த ராகு – புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் மிதுன ராசிக்­குப் பெயர்ச்­சி­யா­கி­றார். இது 11ம் இடம். அதே­போல் கேது மகர ராசி ஆறா­மி­டத்­தில் இருந்து உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். இது உங்­க­ளுக்கு ஐந்­தா­மி­டம்.

13.02.2019 முதல் ராகு உங்­கள் ராசிக்கு நற்­ப­லன்­களை வழங்க லாபஸ் தானத்­தில் சஞ்­ச­ரிக்­கி­றார். ராகு­வின் நற்­ப­லன்­க­ளாக லாப­க­ர­மாக பண­வ­ர­வு­கள்இருக்­கும்தன­லா­பம்,சுக­சௌக்­யம் – பெண்­க­ளி­டம் சந்­தோ­ஷம் என பலன்­கள் சிறப்­பாக இருக்­கும். தொழில்­சார்ந்த விஷ­யங்­கள் லாப­க­ர­மாக இருக்­கும். புதிய பொருள்­சேர்க்கை என நற்­ப­லன்­கள் 20.08.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு திரு­வா­திரை நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது சுய­பா­த­சா­ரம் சிறப்­பாக இருக்­கும். தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வீர்­கள். எதிர்­பார்க்­கும் விஷ­யம் அனு­கூ­ல­மா­கும். எலக்ட்­ரா­னிக்ஸ் சம்­பந்­தப்­பட்ட புதி­ய­பொ­ருள் சேர்க்கை உண்­டா­கும். அர­சி­யல் சார்ந்­த­வர்­க­ளுக்கு முன்­னேற்­ற­மாக இருக்­கும். உழைக்­கும் திறன் அதி­க­ரிக்­கும். இந்த சூழ்­நிலை 28.04.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு மிரு­க­சீ­ரிட நட்­சத்­திர பாத சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது பண­வ­ர­வு­கள் அதி­க­ரிக்­கும். சுக­சௌக்­யம் மிகுந்­தி­ருக்­கும். பூமி­சார்ந்த விஷ­யங்­கள் லாபம் தரும். ஆன்­மிக சிந்­தனை நற்­ப­லன் தரும். வீடு கட்­டு­வது, நிலம் வாங்­கு­வது என சுப­கா­ரிய ஈடு­பா­டு­கள் இருக்­கும். ராகு சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு லாப­க­ர­மான பலன்­களை தரும்.

இது­வரை ஆறா­மி­டத்­தி­லி­ருந்து நற்­ப­லன் வழங்­கிய கேது உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனு­சு­ராசி பெயர்ச்­சி­யாகி ஐந்­தா­மிட சஞ்­சார பலன்­களை தரு­வார். இந்த கால­கட்­டத்­தில் எதிர்ப்­பு­கள் வலுக்­கும். தேக ஆரோக்­ய­குறை சிர­மம் தரும். பூர்­வீக சொத்து சம்­பந்­தப்­பட்ட பிரச்­னை­கள் சிர­மம் தரும். புத்­தி­ரர்­கள் பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் கூடும். குடும்ப கவலை கூடும், முன்­னெச்­ச­ரிக்­கை­ யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம். 17.04.2019 அன்று கேது பூரா­டம் 4ம் பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது பொரு­ளா­தார சூழ்­நி­லை­க­ளில் சிர­மங்­கள் வரும். பண­வ­ரவு கால­தா­ம­த­மா­கும். பயண அலைச்­சல் சிர­மம் தரும். இந்த சூழ்­நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு கேது மூலம் நட்­சத்­தி­ரக் காலில் சஞ்­ச­ரிக்­கும்­பொ­ழுது சுயச்­சா­ரம் பெறு­வ­தால் புத்­தி­சா­லித்­த­ ன­மாக சிந்­திப்­பீர்­கள். தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வீர்­கள். தொழில் ரீதி­யான சூழ்­நிலை கடின உழைப்பு இருக்­கும்.

30.08.2020 வரை இந்த சூழ்­நிலை நீடிக்­கும். விநா­ய­கர் வழி­பாடு, பெரு­மாள் வழி­பாடு உங்­கள் சிர­த­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும். ராகு சாத­க­மாக இருப்­பார். கேது சிர­மங்­கள் தரு­வார். சூழ்­நி­லையை அனு­ச­ரித்து திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள்.


கன்னி

இது­வரை லாபஸ்­தா­னத்­தில் சஞ்­ச­ரித்த ராகு – புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் மிதுன ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். இது பத்­தா­மி­டம். அதே­போல் கேது 5ம் இடத்­தி­லி­ருந்து உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு பெயர்­சி­சி­யா­கி­றார். இது உங்­க­ளுக்கு நாலா­மி­டம்.

13.02.2019 முதல் ராகு உங்­கள் ராசிக்கு பத்­தா­மி­டம் வரு­வ­தால் தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் கடின உழைப்பு இருக்­கும். மேல­தி­கா­ரி­க­ளின் அனு­ச­ரணை இருக்­காது! தொழில் கல்­வி­யா­ளர்­க­ளுக்கு சிர­மங்­கள் இருக்­கும். உடற்­சோர்வு மனச்­சோர்வு உங்­க­ளுக்கு காரி­யத்­த­டை­யாக இருக்­கும். ஆன்­மிக சிந்­தனை நற்­ப­லன் தரும். 20.08.2019க்கு பிறகு ராகு திரு­வா­திரை நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது சுயச்­சா­ரம் பெறு­வ­தால் உங்­க­ளுக்கு தன்­னம்­பிக்கை அதி­க­மா­கும். உழைக்கு திறன் அதி­க­ரிக்­கும். பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். வர­வுக்கு ஏற்ப செல­வு­கள் இருக்­கும். இந்த நிலை 28.04.2020 வரை நீடிக்­கும் அதன் பிறகு ராகு மிரு­க­சீ­ரி­டம் நட்­சத்­திர பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது செவ்­வாய் பாத சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு பூமி சார்ந்த செல­வு­கள் கொடுக்­கும். சுபச்­செ­ல­வு­கள் வீடு கட்­டு­தல் என செல­வு­கள் அதி­க­ரிக்­கும். வீடு, மனை போன்ற விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். நிர்­வா­கத்­து­றை­யி­ன­ருக்கு நிர்­வா­கத்­தி­றன் கூடும். பண­வ­ர­வு­கள் கூடும். தொழில் சார்ந்த சிர­மங்­கள் இருப்­ப­தால் செவ்­வாய் கிழமை ராகு காலத்­தில் துர்க்­கை­யம்­ம­னுக்கு எலு­மிச்சை விளக்­கில் நெய் தீபம் ஏற்றி வழி­ப­டு­வது உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும்.

கேது­வின் தனுசு ராசி சஞ்­சா­ரம் நாலா­மி­டம் என்­ப­தால் சுகஸ்­தா­னம் – சுகத்தை கெடுத்து சிர­மத்தை கொடுப்­பார் கேது – புத்­தி­சா­லித்­த­ன­மாக சிந்­தித்து செயல்­பட்­டால் சிர­மத்தை தவிர்க்­க­லாம்! முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை. தீயோர் சேர்க்­கை­யால வீண் பிரச்­னை­கள் வரும். தவிர்ப்­பது உத்­த­மம். வயிறு சம்­பந்­தப்­பட்ட உபாதை சிர­மம் தரும். தேக ஆரோக்­யக்­குறை, பயண அலைச்­சல் – வெளி­யூர் பய­ணம், என சிர­மங்­கள் அதி­க­மா­கும். சில­ருக்கு தாயார் உடல் நிலை­யில் கவ­னம் தேவைப்­ப­டும். வாகன போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை.

17.04.2019 அன்று கேது பூரா­டம் 4ம் பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது பொரு­ளா­தார சூழ்­நி­லைள் முன்­னேற்­றம் பெறும். எதிர்­பா­ராத பண வர­வு­கள் சிர­மங்­களை குறைக்­கும். எடுத்த காரி­யத்தை முடிப்­பீர்­கள். இந்த நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு மூலம் நட்­சத்­திர காலில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது கேது­வுக்கு சுய பாத சஞ்­சா­ரம் என்­ப­தால தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வீர்­கள். தொழீல் ரீதி­யான புத்­தி­சா­லித்­த ­னம் உயர்ந்து இருக்­கும். பாராட்டு கவு­ரம் கிட்­டும். விநா­ய­கர் வழி­பாடு, துர்க்­கை­யம்­மன் வழி­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும்.


துலாம்

இது­வரை கடக ராசி­யில் பத்­தா­மிட சஞ்­சா­ரத்­தில் இருந்த ராகு, புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் மிதுன ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். அதே­போல் மகர ராசி நாலா­மி­டத்­தில் சஞ்­ச­ரித்த கேது உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். இது உங்­க­ளுக்கு மூன்­றா­ட­மி­டம்.

13.02.2019 முதல் உங்­க­ளுக்கு 9ம் இடத்­தில் சஞ்­ச­ரிக்­கும் ராகு எதி­ரி­க­ளால் தொல்லை – யாருக்­கே­னும் கட்­டுப்­ப­டு­தல், காரி­யத்­தடை என சிரம பலன்­களை வழங்­கு­வார். இந்த சூழ்­நிலை 20.08.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு திரு­வா­திரை நட்­சத்­திர பாத சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது, சுய­சா­ரம் பெறு­வ­தால் தன்­னம்­பிக்கை அதி­க­மாக இருக்­கும். கடின உழைப்பு இருக்­கும். அர­சி­யல் சார்ந்­த­வர்­க­ளுக்கு எதிர்­பா­ராத சிக்­கல் வரும். பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். இந்த நிலை 28.04.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு மிரு­க­சீ­ரிட நட்­சத்­திர பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது செவ்­வாய் பாத சஞ்­சா­ரம் என்­ப­தால் தன்­னம்­பிக்கை அதி­க­ரிக்­கும். உழைக்­கும் திறன் கூடும். அர­சி­யல் சார்ந்­த­வர்­க­ளுக்கு எதிர்­பா­ராத திடீர் திருப்­பம் இருக்­கும். பொறு­மை­யு­டன் சூழ்­நி­லையை அனு­ச­ரிப்­பது உத்­த­மம். பூமி­சார்ந்த விஷ­யங்­க­ளில் செல­வு­கள் இருக்­கும். சுபச்­செ­ல­வு­கள் கட்­டி­டம் கட்­டு­தல், பொருள்­சேர்க்கை என நற்­ப­லன்­கள் இருக்­கும். நிர்­வா­கத்­ ­தி­றன் அதி­க­ரிக்­கும் இந்த சூழ்­நிலை 31.01.2020 வரை நீடிக்­கும். ராகு­சி­ரம பலன்­க­ளுக்கு துர்க்­கை­ யம்­மன் வழி­பாடு செவ்­வாய் கிழமை ராகு­கா­லத்­தில் எலு­மிச்சை விளக்­கில் நெய்­தீ­பம் ஏற்றி வழி­ப­டு­வது உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாகும்.

கேது­வின் தனுசு ராசி சஞ்­சா­ரம் உங்­கள் ராசிக்கு மூன்­றா­மிட சஞ்­சா­ரம் என்­ப­தால் உங்­க­ளுக்கு இறை­ய­ருள் அதி­கம் கிட்­டும். ஆன்­மிக சிந்­தனை உங்­க­ளுக்கு நற்­ப­லன்­கள் தரும். பண­வ­ர­வு­கள் உங்­கள் பிரச்­னை­க­ளுக்கு தீர்­வாக அமை­யும். உற­வு­கள் மேம்­ப­டும். சுப­கா­ரிய முயற்சி அனு­கூ­ல­மா­கும். நீங்­கள் நினைத்த காரி­யம் கைகூ­டும். தன­லா­பம் கிட்­டும். இந்த நிலை 17.04.2019 வரை நீடிக்­கும் அதன் பிறகு பூரா­டம் நட்­சத்­தி­ரம் 4ம் பாதத்­தில் கேது சஞ்­ச­ரிக்­கும் பொழுது, பொரு­ளா­தார சூழ்­நி­லை­க­ளில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். பண­வ­ர­வு­கள் தாரா­ள­மாக இருக்­கும். சுபச்­செ­ல­ வி­னங்­கள் அதி­க­ரிக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன்­கள் தரும். இந்த நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு மூலம் நட்­சத்­தி­ரம் பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் கேது­வுக்கு சுய­பாத சஞ்­சா­ரம் என்­ப­தால் கடின உழைப்பு இருந்­தா­லும், பொரு­ளா­தார முன்­னேற்­றம் இருக்­கும். பண­வ­ரவு தாரா­ள­மாக இருக்­கும். சுப­கா­ரிய ஈடு­பாடு – சுபச்­செ­ல­வி­னங்­கள் அதி­க­ரிக்­கும். உற­வு­கள் மேம்­ப­டும். ஆன்­மிக ஈடு­பாடு மகிழ்ச்சி தரும். விவ­சா­யப் பணி முன்­னேற்­ற­மா­கும். இறை­ய­ருள் கிட்­டும். வளர்ப்பு பிரா­ணி­கள் மகிழ்ச்சி கிட்­டும். 31.08.2020 வரை இந்த சூழ்­நிலை நீடிக்­கும்.

துர்க்­கை­யம்­மன் வழி­பாடு, உங்­கள் பிரச்­னை­க­ளுக்கு பரி­கா­ர­மாக அமை­யும். விநா­ய­கர் வழி­பாடு பெரு­மாள் வழி­பாடு உங்­க­ளுக்கு நன்மை பயக்­கும்.


விருச்சிகம்

இது­வரை கடக ராசி­யில் ஒன்­ப­தா­மிட சஞ்­சா­ரத்­தில் இருந்த ராகு – புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் மிதுன ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். அதே­போல் கேது மகர ராசி­யில் மூன்­றா­மிட சஞ்­சா­ரம் முடிந்து உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்­கும் பெயர்ச்­சி­யாகி ராசிக்கு இரண்­டா­மிட பலன்­க­ளைத் தரு­வார்.

13.02.2019 முதல் உங்­க­ளுக்கு எட்­டா­மி­டத்­தில் சஞ்­ச­ரிக்­கும் ராகு முயற்­சி­க­ளில் தடை, நெருங்­கிய உற­வி­னர்­கள் பிரிந்து செல்­லு­தல், குடும்­பத்தை விட்டு வேறு ஊர்­ப­ய­ணம் செல்­லு­தல், குடும்ப கவலை எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் என சிர­மங்­கள் இருக்­கும். இந்த சூழ்­நிலை 20.08.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு திரு­வா­திரை நட்­சத்­திர பாத­சஞ்­சா­ரம் செய்­யும்­பொ­ழுது, சுய­சா­ரம் பெறு­வ­தால் தன்­னம்­பிக்கை மிகுந்­தி­ருக்­கும். போட்­டி­கள் எதிர்ப்­பு­கள் சிர­மம் தரும். பணம் வர­வி­னங்­கள் தள்­ளிப்­போ­கும். இந்த நிலை 28.04.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு மிரு­க­சீ­ரிட நட்­சத்­திர பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும்­பொ­ழுது செவ்­வாய் பாத­ச­ரம் என்­ப­தால் உங்­க­ளுக்கு பூமி சார்ந்த விஷ­யங்­க­ளில் சிக்­கல்­கள் வரும். எதிர்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும். கூட்­டா­ளி­க­ளு­டன் ஆன மனக்­க­சப்பு அதி­க­ரிக்­கும். சில­ருக்கு குடும்ப பிரச்­னை­கள் மனக்­க­வலை தரும். இந்த சூழ்­நிலை 31.08.2020 வரை நீடிக்­கும். ராகு­வின் இந்த சிரம பலன்­க­ளுக்கு துர்க்­கை­யம்­மன் வழி­பாடு செவ்­வாய்­கி­ழமை, ராகு காலத்­தில் எலு­மிச்சை விளக்­கில் நெய் தீபம் ஏற்றி வழி­ப­டு­வது உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும்.

கேது­வின் தனுசு ராசி சஞ்­சா­ரம் உங்­கள் ராசிக்கு இரண்­டா­மிட சஞ்­சா­ரம் என்­ப­தால் உங்­க­ளுக்கு திரு­டர்­க­ளால் பயம், அக்னி சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­க­ளில் அபா­யம் எதி­ரி­க­ளால் தொல்லை, முன்­கோ­பம் அரசு காரி­யங்­க­ளில் தடை என சிரம பலன்­கள் இருக்­கும். நல்­லது சொல்­லப் போய் கெட்­ட­தா­கும். எனவே பொறு­மை­யு­டன் இந்த சூழ்­நி­லை­களை அனு­ச­ரிக்க வேண்­டும். உற­வி­னர் அக்­கம் பக்­கத்­தில் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பது அவ­சி­யம். இந்த நிலை 17.04.2019 வரை நீடிக்­கும். அதன்­பி­றகு பூரா­டம் நட்­சத்­தி­ரம் 4ம் பாதத்­தில் கேது சஞ்­ச­ரிக்­கும் பொழுது, பொரு­ளா­தார சூழ்­நி­லை­க­ளில் சிர­மங்­கள் இருந்­தா­லும், எதிர்­பா­ராத திடீர் பண­வ­ர­வு­கள் அவ்­வப்­போது இருக்­கும். குடும்ப செல­வி­னங்­கள் அதி­க­ரிக்­கும். உற­வு­கள் மேம்­ப­டும். ஆன்­மிக ஈடு­பாடு உங்­கள் மனக்­க­வ­லையை தீர்க்­கும். இந்த நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு மூலம் நட்­சத்­தி­ரத்­தில் சஞ்­ச­ரிக்­கும் கேது­வுக்கு சுய­பாத சஞ்­சா­ரம் என்­ப­தால கடின உழைப்பு இருக்­கும். போட்­டி­கள், வழக்கு வியாஜ்­ஜி­யங்­கள் சிர­மம் தரும். பண வர­வை­விட செலவு அதி­க­ரிக்­கும். 30.08.2020 வரை இந்த சூழ்­நிலை நீடிக்­கும்.

துர்க்­கை­யம்­மன் வழி­பாடு, விநா­ய­கர் வழி­பாடு, பெரு­மாள் வழி­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக அமை­யும்.


தனுசு

இது­வரை கடக ராசி­யில் எட்­டா­மிட சஞ்­சா­ரத்­தில் இருந்த ராகு புனர்­பூ­சம், 3ம் பாத்­தில் மிதுன ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். அதே­போல் மகர ராசி இரண்­டா­மி­டத்­தில் சஞ்­ச­ரித்த கேது, உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். உங்­கள் ராசி­யி­லேயே ராகு.

13.02.2019 முதல் உங்­க­ளுக்கு ஏழா­மி­டத்­தில் சஞ்­ச­ரிக்­கும் ராகு – எதி­ரி­க­ளால் தொல்லை, கூட்­டா­ளி­க­ளு­டன் மனக்­க­சப்பு, தூர தேசம் செல்­லு­தல், காதல் சம்­பந்­தப்­பட்ட பிரச்­னை­க­ளில் சிக்­கல், குடும்­பத்­தில் வாக்­கு­வா­தம் என சிரம பலன்­கள் இருக்­கும். இந்த சூழ்­நிலை 20.08.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு, திரு­வா­திரை நட்­சத்­திர பாத சஞ்­சா­ரம் செய்­யும்­பொ­ழுது, சுய­சா­ரம் பெறு­வ­தால் தன்­னம்­பிக்கை அதி­க­மாக இருக்­கும். கடின உழைப்பு இருக்­கும். பொரு­ளா­தார முன்­னேற்­றம் இருக்­கும். இந்த சூழ்­நிலை 28.04.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு மிருக சீரிட நட்­சத்­திர பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது செவ்­வாய் பாத சஞ்­சா­ரம் என்­ப­தால் பூமி சார்ந்த விஷ­யங்­க­ளில் செல­வு­கள் இருக்­கும். சுபச்­செ­ல­வி­னங்­கள் கட்­ட­டம் கட்­டு­தல், பொருள்­சேர்க்கை பூர்­வீக சொத்­துக்­க­ளில் சிக்­கல் என பலன் இருக்­கும். நிர்­வா­கத் திறன் அதி­க­ரிக்­கும். இந்த சூழ்­நிலை 31.08.2020 வரை நீடிக்­கும். ராகு­வின் சிரம பலன்­க­ளுக்கு துர்க்­கை­யம்­மன் வழி­பாடு செவ்­வாய் கிழமை ராகு­கா­லத்­தில் எலு­மிச்சை விளக்கு, நெய் தீபம் ஏற்றி வழி­ப­டு­வது உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும்.

கேது­வின் தனுசு ராசி சஞ்­சா­ரம் உங்­கள் ராசி என்­ப­தால் அக்னி சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­க­ளில் முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவைப்­ப­டும். வெளி­யூர் பய­ணம், எதி­ரி­கள் தொல்லை, உடல் நல­மின்மை, மனச்­சோர்வு, உடற்­சோர்வு என சிரம பலன்­கள் இருக்­கும். கேது சஞ்­சா­ரம் உடன் சனி­யும் ராசி­யில் இருந்து ஏழரை சனி பலன்­வேறு தரு­வ­தால் எதிர்­பா­ராத சிர­மங்­கள் அதி­கம் இருக்­கும். எனவே நீங்­கள் இந்த சிர­மங்­க­ளுக்கு விநா­ய­கர் வழி­பாடு, சனிக்­கி­ழமை பெரு­மாள் வழி­பாடு செய்­வது உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். இந்த சிரம சூழ்­நிலை 17.04.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு பூரா­டம் நட்­சத்­தி­ரம் 4ம் பாதத்­தில் கேது சஞ்­ச­ரிக்­கும் பொழுது பொரு­ளா­தார சூழ்­நி­லை­க­ளில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். பண­வ­ர­வு­கள் தாரா­ள­மாக இருக்­கும். குடும்ப பிரச்­னை­கள் தீரும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன்­கள் தரும்.

இந்­த­நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு மூலம் நட்­சத்­தி­ரம் பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது கேது சுய­பாத சாரம் பெற்று உங்­க­ளுக்கு தன்­னம்­பிக்கை தரு­வார். கடின உழைப்பு இருந்­தா­லும் எதிர்­பா­ராத பண­வ­ர­வு­கள் உங்­கள் சிர­மங்­களை போக்­கும். பொரு­ளா­தார முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். சுப­கா­ரிய ஈடு­பாடு சுபச்­செ­ல­ வி­னங்­கள் இருக்­கும். உற­வு­கள் மேம்­ப­டும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன் தரும். இந்த நிலை 31.08.2020 வரை தொட­ரும். துர்க்­கை­யம்­மன் வழி­பாடு, விநா­ய­கர் வழி­பாடு சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும். சனிக்கு பெரு­மாள் வழி­பாடு உங்­க­ளுக்கு நன்மை தரும்.


மகரம்

இது­வரை கடக ராசி­யில் ஏழா­மி­டத்தில் சஞ்­ச­ரித்த ராகு புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் மிதுன ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். ஆறா­மி­டம் ராகு வரு­கி­றார். அதே­போல் மகர ராசி­யில் சஞ்­ச­ரித்த கேது உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யாகி 12ம் இடம் சிர­மங்­களை தரு­வார்.

இதில் ராகு ஆறா­மிட நற்­ப­லன்­கள் தரு­வார். 13.02.2019 முதல் உங்­க­ளுக்கு ராகு, தரும் பலன்­கள் நீண்ட நாள் கடன்­கள் தீரும். வழக்கு வியாஜ்­ஜி­யங்­க­ளில் வெற்­றி­யைத் தரு­வார். தேக ஆரோக்­கி­யத்­தில் முன்­னேற்­றம் எதி­ரி­களை வெல்­லு­தல் காரிய அனு­கூ­லம் தாரா­ள­மான பண­வ­ர­வு­கள் என நற்­ப­லன்­களை தரு­வார். இந்த சூழ்­நிலை 20.08.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு திரு­வா­திரை நட்­சத்­திர பாத சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது சுயச்­சா­ரம் பெறு­வ­தால் தொழில் ரீதி­யான முன்­னேற்­றம், எலக்ட்­ரா­னிக்ஸ் பொருட்­கள் வாங்­கு­வீர்­கள். நினைத்த காரி­யம் கை கூடும். தன்­னம்­பிக்கை அதி­க­மா­கும். அர­சி­யல் சார்ந்­த­வர்­க­ளுக்கு நல்ல முன்­னேற்­றம் வரும். இந்த சூழ்­நிலை 28.04.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு மிரு­க­சீ­ரிட நட்­சத்­திர பாத­சா­ரம் பெறும்­பொ­ழுது செவ்­வாய் பாத­சா­ரம் என்­ப­தால் பூமி சார்ந்த விஷ­யங்­கள் லாபம் தரும். விவ­சா­யப் பணி­க­ளில் நல்ல முன்­னேற்­றம் வரும். உழைக்­கும் திறன் அதி­க­ரிக்­கும். பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன் தரும். நிர்­வா­கத்­தி­றன் கூடும். சுபச்­செ­ல­வு ­கள் வரும். இந்த சூழ்­நிலை 31.08.2020 வரை நீடிக்­கும்.

கேது­வின் தனுசு ராசி சஞ்­சா­ரம் உங்­கள் ராசிக்கு பன்­னி­ரெண்­டாம் இடம் என்­ப­தால் சுபச்­செ­ல­வு­கள் அதி­கம் இருக்­கும். பூமி சார்ந்த விஷ­யங்­கள் செல­வு­கள் அதி­க­மாக இருக்­கும். பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். எதிர்­பா­ராத செல­வு­கள் சிர­மப்­ப­ டுத்­தும். கண் சம்­பந்­தப்­பட்ட உபாதை இருக்­கும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவைப்­ப­டும். மனக்­கு­ழப்­பம் அதி­கம் இருக்­கும். பொறு­மை­யு­டன் சூழ்­நி­லையை அனு­ச­ரிப்­பது உத்­த­மம். உற­வி­னர்­க­ளி­டையே மனக்­க­சப்பு வரும். வரவு ஒரு பக்­கம் என்­றால் செலவு மறு­பக்­கம் வரும். இந்த சூழ்­நிலை 17.04.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு பூரா­டம் நட்­சத்­தி­ரம் 4ம் பாதத்­தில் கேது சஞ்­ச­ரிக்­கும் பொழுது பொரு­ளா­தார சூழ்­நி­லை­யில் முன்­னேற்­றம் வரும். சுப­கா­ரிய ஈடு­பாடு, சுபச்­செ­ல­வி­னங்­கள் இருக்­கும். இந்த நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு மூலம் நட்­சத்­திர பாத­சா­ரம். கேது­வின் சுய­சா­ரம் என்­ப­தால் கடின உழைப்பு இருக்­கும். உற­வு­கள் மேம்­ப­டும். காரிய அனு­கூ­லம் – சுப­கா­ரிய ஈடு­பாடு மகிழ்ச்சி தரும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மா­கும். இந்த சூழ்­நிலை 31.08.2020 வரை நீடிக்­கும்.

கேது­வின் சஞ்­சார சிர­மங்­க­ளுக்கு விநா­ய­கர் வழி­பாடு உத்­த­மம். பெரு­மாள் வழி­பாடு உங்­க­ளுக்கு நன்மை பயக்­கும். ராகு நற்­ப­லன்­கள் தரு­வ­தால் ஓர­ளவு சூழ்­நி­லை­களை சமா­ளிப்­பீர்­கள். துர்க்­கை­யம்­மன் வழி­பாடு உங்­க­ளுக்கு நன்மை தரும்.


கும்பம்

இது­வரை கடக ராசி­யில் ஆறா­மி­டத்­தில் சஞ்­ச­ரித்த ராகு புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் மிதுன ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். ஐந்­தா­மி­டம் ராகு வரு­கி­றார். அதே­போல் மகர ராசி­யில் ராசிக்கு 12ம் இடம் சஞ்­ச­ரித்த கேது உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யாகி 11ம் இடம் லாபஸ்­தான பலன்­களை தரு­வார். ஏற்­க­னவே லாபஸ்­தா­னத்­தில் சனி­யும் இருப்­ப­தால் இரட்­டிப்பு லாபம் இருக்­கும்.

13.02.2019 முதல் உங்­க­ளுக்கு சுக­ச­வுக்­கி­யம், தன­லா­பம் பண­வ­ர­வு­கள், பெண்­க­ளி­டம் சந்­தோ­ஷம் பெறு­தல், பொரு­ளா­தார மேன்மை – புதிய பொருட்­சேர்க்கை வீடு, மனை போன்ற விஷ­யங்­க­ளில் லாபம், நினைத்­தது நடக்­கும் என்று பலன்­கள் இருக்­கும். இந்த சூழ்­நிலை 17.04.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு பூரா­டம் நட்­சத்­தி­ரம் 4ம் பாதத்­தில் கேது சஞ்­ச­ரிக்­கும் பொழுது பொரு­ளா­தார சூழ்­நி­லை­யில் முன்­னேற்­றம் வரும். பண­வ­ர­வு­கள் தாரா­ள­மாக இருக்­கும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம். சுக­சௌக்­யம் மிகுந்­தி­ருக்­கும். உற­வு­கள் மேம்­ப­டும். காரிய அனு­கூ­லம். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மா­கும். இந்த சூழ்­நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு மூலம் நட்­சத்­திர பாத­சா­ரம் கேது­வின் சுயச்­சா­ரம் என்­ப­தால் தன்­னம்­பிக்­கை­யு­டன் செய்­யும் காரி­யம் லாபம் தரும். கடின உழைப்பு இருந்­தா­லும் அதற்­கேற்ப லாபம் தரும். உற­வு­கள் மேம்­ப­டும். நண்­பர்­கள் உத­வி­க­ர­மாக இருப்­பார்­கள். சுப­கா­ரிய ஈடு­பாடு மகிழ்ச்சி தரும். தொழில் ரீதி­யான சூழ்­நிலை முன்­னேற்­றம் பெறும். வரு­மா­னம் கூடும். இந்த சூழ்­நிலை 31.08.2020 வரை நீடிக்­கும். கேது­வின் லாபஸ்­தான சஞ்­சா­ரம் உடன் சனி, குரு ஆகிய கிர­கங்­கள் இருப்­ப­தால் இந்த ஆண்டு சிறப்­பான லாப பலன்­கள் கிட்­டும். கும்ப ராசிக்கு மட்­டும் ராகு, கேது பெயர்ச்­சி­யில் கேது பெயர்ச்சி சிறப்­பாக இருக்­கும். கும்­ப­ரா­சிக்கு ஐந்­தா­மி­டம் சஞ்­ச­ரிக்­கும் ராகு உங்­க­ளுக்கு புத்­தி­ரர்­கள் பற்­றிய மனக்­க­வலை தரு­வார். குடும்­பத்தை விட்டு வெளி­யூர் பய­ணம் செல்­லு­தல், பயண அலைச்­சல் மிகுந்து இருக்­கும். உடற்­சோர்வு, மனச்­சோர்வு இருக்­கும். புத்­தி­ரர்­கள் பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் அதி­கம் இருக்­கும். பூர்­விக் சொத்து சம்­பந்­தப்­பட்ட பிரச்­னை­கள் சிர­மம் தரும். அர­சி­யல் சார்ந்­த­வர்­க­ளுக்கு எதிர்­பா­ராத முன்­னேற்­றம் இருக்­கும். அர­சி­யல் சார்ந்த அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். எதிர்­பா­ராத பண­வி­ர­யம் வரும்.

இந்த சூழ்­நிலை 20.08.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு திரு­வா­திரை நட்­சத்­திர பாத சஞ்­சா­ரம் செய்­யும்­பொ­ழுது சுயச்­சா­ரம் பெறு­வ­தால் கலை, இலக்­கி­யம், அர­சி­யல் போன்ற துறை­க­ளில் தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­பட்டு முன்­னேற்­றம் காண்­பீர்­கள். நினைத்த காரி­யம் கைகூ­டும். தன்­னம்­பிக்கை அதி­க­மா­கும். இந்த சூழ்­நிலை 28.04.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு மிரு­சீ­ரிட நட்­சத்­திர பாத­சா­ரம் பெறும் பொழுது செவ்­வாய் சாரம் பெறு­வ­தால் பூமி சார்ந்த விஷ­யங்­க­ளில் எதிர்­பா­ராத சிர­மங்­கள் வரும். உழைக்­கும் திறன் அதி­க­ரிக்­கும். பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­றம் பெறும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன் தரும். இந்த சூழ்­நிலை 31.08.2020 வரை நீடிக்­கும். ராகு­வின் சிர­மங்­க­ளுக்கு செவ்­வாய் கிழமை ராகு­கா­லத்­தில் துர்க்­கை­யம்­ம­னுக்கு எலு­மிச்சை விளக்­கில் நெய்­தீ­பம் ஏற்றி வழி­பட பரி­கா­ர­மா­கும்.


மீனம்

இது­வரை கடக ராசி­யில் ஐந்­தா­மி­டத்­தில் சஞ்­ச­ரித்த ராகு புனர்­பூ­சம் 3ம் பாதத்­தில் மிதுன ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். இது நாலா­மிட சஞ்­சா­ரம். அதே­போல் மகர ராசி­யில் சஞ்­ச­ரித்த கேது உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யாகி பத்­தா­மி­டம் சஞ்­சா­ரம் செய்­வார்.

இதில் நாலா­மி­டம் ராகு­வின் பலன்­க­ளாக 13.02.2019 முதல் உங்­க­ளுக்கு வேண்­டி­ய­வர்­களே உங்­க­ளுக்கு எதிர்ப்­பாக செயல்­ப­டும் சிர­மம் வரும். தாய­கத்தை விட்டு வெளி­யூர் செல்­லும் சூழ்­நிலை வரும். தாயார் தேக ஆரோக்­கி­யத்­தில் கவ­னம் தேவைப்­ப­டும். வாகன போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை தேவைப்­ப­டும். கடினஉழைப்பு, அலைச்­சல் போன்ற சிர­மங்­கள் இருக்­கும். பொரு­ளா­தார சூழ்­நி­லை­யில் வர­வுக்கு ஏற்ப செல­வு­கள் இருக்­கும். ராகு­விற்கு குரு­பார்வை இருப்­ப­தால் சிர­மங்­கள் குறை­யும். இந்த சூழ்­நிலை 20.08.2019 வரை நீடிக்­கும். அதன்­பி­றகு ராகு திரு­வா­திரை நட்­சத்­தி­ரம் சுய­பாத சாரத்­தில் சஞ்­ச­ரிப்­ப­தால் புதிய எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் வாங்­கு­வீர்­கள். நினைத்த காரி­யம் கை கூடும். தன்­னம்­பிக்கை அதி­க­மா­கும். கலை, இலக்­கி­யம், அர­சி­யல் போன்ற துறை முன்­னேற்­ற­மாக இருக்­கும். கடின உழைப்பு இருக்­கும். இந்த சூழ்­நிலை 28.04.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு ராகு மிரு­க­சீ­ரி­டம் நட்­சத்­திர பாத­சா­ரத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது செவ்­வாய் சாரம் பெறு­வ­தால் பூமி சார்ந்த விஷ­யங்­க­ளில் செல­வு­கள் வரும். வீடு மனை போன்ற விஷ­யங்­கள் முன்­னேற்­றம் பெறும். கடின உழைப்பு, அலைச்­சல், மனச்­சோர்வு, உடற்­சோர்வு தரும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம். உழைக்­கும் திறன் அதி­க­ரிக்­கும். கல்­வி­யா­ளர்­க­ளுக்கு முன்­னேற்­ற­மி­ருக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன் தரும். நிர்­வா­கத் திறன் கூடும். இந்த சூழ்­நிலை 31.08.2020 வரை நீடிக்­கும்.

கேது­வின் தனுசு ராசி சஞ்­சா­ரம் உங்­கள் ராசிக்கு பத்­தா­மி­டம் என்­ப­தால் தொழில்­ரீ­தி­யான சூழ்­நிலை முன்­னேற்­றம் பெறும். தொழில் கல்வி சிறப்­பாக இருக்­கும். பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். தொழில் சார்ந்த வரு­மா­னம் கூடும். புதிய முயற்­சி­கள் அனு­கூ­ல­மா­கும். காரிய அனு­கூ­ல­மா­கும். வீடு மனை போன்ற விஷ­யங்­கள் முன்­னேற்­ற­மா­கும். இந்த சூழ்­நிலை 17.04.2019 வரை நீடிக்­கும். அதன்­பி­றகு கேது பூராட நட்­சத்­தி­ரம் 4ம் பாதத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ றம் பெறும். தொழில்­ரீ­தி­யான சூழ்­நி­லை­க­ளில் முன்­னேற்­றம் தரும். நிர்­வா­கத்­தி­றன் அதி­க­ரிக்­கும். நினைத்த காரி­யம் கைகூ­டும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம். பண­வ­ரவு தாரா­ள­மாக இருக்­கும். இந்த சூழ்­நிலை 20.12.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு கேது மூலம் நட்­சத்­திர பாத­சா­ரத்­தில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது சுய­சா­ரம் பெறு­வ­தால் தன்­னம்­பிக்கை அதி­க­மி­ருக்­கும். கடின உழைப்பு இருக்­கும். புத்­தி­சா­லித்­த­ன­மான செயல்­பா­டு­கள் உங்­க­ளுக்கு கவு­ர­வம் சேர்க்­கும். தொழில் ரீதி­யான முன்­னேற்­றம் வரு­மா­னம் கூடும். இந்த சூழ்­நிலை 31.08.2020 வரை நீடிக்­கும்.

மீன ராசிக்கு ராகு சஞ்­சா­ரம் சிர­மம் தரும். எனவே அவர்­கள் செவ்­வாய் கிழமை ராகு­கா­லத்­தில் துர்க்­கை­யம்­ம­னுக்கு எலு­மிச்சை விளக்­கில் நெய்­தீ­பம் ஏற்றி வழி­ப­டு­வது சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும்.

Trending Now: