செங்கோட்டையில் ஏற்றப்பட்டது காலிஸ்தான் கொடியா? சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு

26-01-2021 07:55 PM

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டையில் இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது ஏற்றப்பட்டது காலிஸ்தான் கொடி என சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது, சில விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டைக்குள் தடையை மீறி நுழைந்தனர். அங்குள்ள கொடிக் கம்பத்தின் மீது ஏறி கொடிகளைப் பறக்க விட்டனர்.

இந்த கொடி காலிஸ்தான் கொடி என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சிலர் இந்தியாவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைப்பற்றி விட்டனர். செங்கோட்டையில் கொடியேற்றி விட்டனர் என்று கூறத்தொடங்கினர்.

இதற்கு சிலர் இந்திய கொடியும் அங்க பறக்கிறது என்று எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில் அங்கிருந்த செய்தியாளர்கள் அவை காலிஸ்தான் கொடி அல்ல என உறுதி செய்துள்ளனர். ஏற்றப்பட்ட இரண்டு கொடிகளில் ஆரஞ்சு நிற கொடி, சீக்கிய மத கொடி நிஷான் சாகிப் என கூறப்பட்டு உள்ளது. இளமஞ்சள் நிறம் கொண்ட மற்றொன்று விவசாய சங்கத்துடையது என்று தெரியவந்துள்ளது.Trending Now: