குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர்கள் தேசியகொடியை ஏற்றி மரியாதை

26-01-2021 10:20 AM

சென்னை

இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். 

காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழும் பதக்கமும் வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்டம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மூவர்ண கொடியை வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 399 பேருக்கு பாராட்டு சான்றிதழும், 109 பதக்கமும் வழங்கினார்.


தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் 72 வது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் சமீரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங் தலைமையிலான காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டார்.

மேலும் மூவர்ண பலூன் மற்றும் சமாதானப் புறாவை பறக்கவிட்டு, தியாகிகளை கெளரவித்தார்.


கோயம்புத்தூர் மாவட்டம்

கோவை 72-வது குடியரசு தினவிழா கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டையில் 72வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 72-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


ஈரோடு மாவட்டம்

நாட்டின் 72 வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு, வ.உ. சி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


கடலூர் மாவட்டம்

72 வது குடியரசு தின விழா மஞ்சகுப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


Trending Now: