72வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றினார்!

26-01-2021 10:14 AM

புதுதில்லி:

72வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.


பிரதமர் மோடி மரியாதை

குடியரசு தினத்தையொட்டி, புதுதில்லியிலுள்ள போர் நினைவு சின்னத்தில், 

இந்திய ராணுவ வீரர்கள் அணி வகுக்க, இராணுவ இசை முழங்க

பிரதமர் நரேந்திர மோடி, தேசத்திற்காக உயிர் நீத்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசம், தனக்காக உயிர்தந்த வீரர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறது.

இந்நிகழ்வில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ தளபதிகள், வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியாவின் 72வது குடியரசு தின கொண்டாட்டங்களை ஒட்டி இந்திய குடிமக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை பதிவு செய்த பிரதமர் நரேந்திர மோடி இறுதியில் ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தையும் குறிப்பிட்டார்

பிரதமரின் வாழ்த்துச் செய்தி கீழே தரப்பட்டுள்ளது:


பின்னர் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக கொடியை ஏற்றினார்.  22 முறை பீரங்கிக்குண்டுகள் முழங்கின.

அதன் பிறகு குடியரசு தின அணி வகுப்பு துவங்கியது.

அணிவகுப்பு நிகழ்ச்சிகள்

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் குடியசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

எம்ஐ 17வி5 ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடியுடன் வான் சாகசம்.

ராணுவத்தின் உயரிய விருதுகளை வென்றவர்கள் அணிவகுப்பில் பங்கேற்பு.

வங்கதேசத்தின் முப்படை வீரர்களின் இந்திய குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு.

வரலாற்றில் முதல் முறையாக வங்கதேசத்தின் முப்படை இந்திய குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு.

வங்கதேசத்தின் 122பேர் அடங்கிய முப்படை வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு

T-90 பீஷ்மா ரக டாங்குகள் அணிவகுத்து வருகின்றன. 5கிமீ தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்க வல்லது பீஷ்மா டாங்குகள். இரவிலும் கூட இலக்குகளை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது பீஷ்மா டாங்குகள்.

பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது.

பினாக்கா ஏவுகணைகளை செலுத்தும் அமைப்பு அணிவகுப்பில் பங்கேற்பு

எல்லையில் பாலம் அமைக்கும் T-72 டாங்கி போன்ற வாகனம் அணிவகுப்பு.

ருத்ரா மற்றும் துருவ் வகை ஹெலிகாப்டர்களின் சாகசம்.

இந்திய ராணுவத்தின் ஜாட் படைப்பிரிவு வீரர்கள் அணிவகுப்பு.

கடற்படை, விமானப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு.

டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பு காட்சிப்படுத்தப்பட்டது.

டெல்லி போலீஸ், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு.

கமாண்டோ படை வீரர்களின் ஆற்றல்மிகு அணிவகுப்பு.

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு.

என்சிசி மாணவர்கள் குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு.

பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் அலங்கார வாகனங்கள்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் அலங்கார ஊர்தி, பாருக்குள்ளே நல்ல நாடு எனும் பாடல் மற்றும் பரத நாட்டியக் கலைஞர்களின்   நாட்டியத்துடன்  அமைந்தது.

தவில், நாதஸ்வர கலைஞர்களுடன் மாமல்லபுரம் கடற்கரை கோவிலுடன் தமிழக அரசின் ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

17 மாநிலங்கள் பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 17 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் சார்பில் அலங்கார வண்டிகள் பங்கு கொண்டன.

அசாம் குஜராத் தமிழ்நாடு மகாராஷ்டிரம் உத்தரகாண்ட் சத்தீஸ்கர் பஞ்சாப் திரிபுரா மேற்கு வங்கம் சிக்கிம் உத்தரப் பிரதேசம் கர்நாடகம் கேரளா ஆந்திரப்பிரதேசம் அருணாசலப் பிரதேசம் டெல்லி லடாக் ஆகியவை தங்கள் அலங்கார வண்டிகளுடன் பங்கு கொண்டன.

இவைத்தவிர ஒன்பது மத்திய அமைச்சகங்கள் தங்கள் தங்கள் அலங்கார அணிவகுப்பு வண்டிகளுடன் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

இந்திய ராணுவ அமைச்சகம் தனது முப்படைகள் உடன் அலங்கார அணிவகுப்பில் பங்கு கொண்டது.
Trending Now: