26-01-2021 09:54 AM
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் போராட்ட பெண்மணியாக பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான ஜூலி, விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசன் மூலம் சின்னத்திரையில் நட்சத்திரமாக அறிமுகமானார்.
https://www.instagram.com/p/CKYJCijhWFL/?utm_source=ig_web_copy_link
இதன்பின் தற்போது சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்மின்றி அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆண் நபர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல சென்று, அங்கு தும்மல் மட்டுமே வருவது போல வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜூலி பதிவு செய்த வீடியோவில் என் உயிருடன் என்று கேப்ஷன் செய்து குறிப்பிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் உங்கள் காதலரா? என கேள்வி கேட்ட துவங்கிவிட்டனர்.