போலியோ சொட்டு மருந்து தினம் ஜனவரி 31-க்கு மாறுதல்

14-01-2021 07:32 PM

புதுடெல்லி

சுகாதாரத் துறையினருக்கு முதல்கட்ட கருணா தடுப்பூசி மருந்து ஜனவரி 16ஆம் தேதி போடப்படுவதால் ஜனவரி 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் தேதி ஜனவரி 31ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தேசியஜனவரி 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16ஆம் தேதி வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார் அதனைத்தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வழங்குவது மறு தேதி அறிவிக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று-(ஜனவரி 14ஆம் தேதி) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மற்ற சுகாதார நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படக்கூடாது இரண்டு தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்த வகையில் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்பது தான் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொள்கையாகும் அதன்படி ஜனவரி 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த தேசிய தடுப்பூசி தினம் இப்பொழுது ஜனவரி 31ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது அன்று தேசிய போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.Trending Now: