தோனி, கோலிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறப்பு அங்கீகாரம்

27-12-2020 07:33 PM

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 10 ஆண்டுகளுக்கான சர்வதேச கனவு அணியை அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனியும் இன்றைய கேப்டன் கோலியும் இரண்டு வகை கிரிக்கெட் போட்டி அணிகளுக்கு கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் டி20 மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டி கனவு அணியின் கேப்டனாக தோனியை அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டியின் கேப்டனாக விராத் கோலி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

டி20 கனவு அணியில் தோனி, ரோகித், விராத் கோலி, ஜஸ்பிரித் பும்ரா என 4 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஓடீஐ அணியில் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய 3 இந்திய வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

உலக அளவில் இதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஓடீஐ, டி20, டெஸ்ட் என்று மூன்று கனவு அணிகளிலும் இடம்பெற வாக்களிக்கப்பட்ட ஒரே வீரர் என்ற பெருமையை விராத் கோலி பெற்றுள்ளார்.

விராத் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்ட டெஸ்ட் கனவு அணியில் ரவிச்சந்திரன் அஷ்வினும்  இடம் பெறுகிறார்.Trending Now: