2022 ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்குபெற இந்திய கிரிக்கெட் போர்டு ஒப்புதல்

24-12-2020 07:23 PM

ஆமதாபாத்,

2022 ஐ.பி.எல். போட்டியில் விளையாட 10 அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு போர்டு ஒப்புதல் அளித்து உள்ளது. விரைவில் 2  புதிய அணிகளும் அறிவிக்கப்படும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு போர்டின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலம் ஆமாதாபாத் நகரில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவற்றின் விவரம் வருமாறு:-

2022 ஆம் ஆண்டிலிருந்து, ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் அனுமதிக்கப்படும். அதன்படி இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்படும்.

ஒலிம்பிக்கில் சேர்க்க ஆதரவு

ஒலிம்பிக் போட்டியில்கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்கும் முயற்சியில் சர்வதேச கிரிக்கெட் போர்டு இறங்கி உள்ளதுஇதற்கு சில விளக்கங்களைப் பெற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை அணுகி உள்ளது. 

20 ஓவர் போட்டி வடிவத்தில்,  2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான முயற்சி துவக்கப்பட்டுள்ளது. 

ஐ.சி.சி முயற்சியை ஆதரிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு போர்டு முடிவு செய்து உள்ளது.

கொரோனா தொற்றுநோயால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் குறைக்கப்பட்டன. அனைத்து முதல் தர ஆண், பெண் விளையாட்டு வீர்ர்களுக்கும் பொருத்தமான இழப்பீடு வழங்கப்படும் .

கூட்டத்தில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மாவுக்கு பதிலாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா வாரியத்தின் துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.

ஐ.சி.சி வாரியத்தில் இயக்குநராக சவுரவ் கங்குலி தொடர பொதுக்குழு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக பங்கேற்க வாரியச் செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யபட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.Trending Now: