பந்தா தாங்க முடியலீங்க... நடிகையால் படக்குழு புலம்பல்

24-11-2020 10:38 AM

அதுல்யா ரவி மீது என் பெயர் ஆனந்தன் படக்குழு புகார் தெரிவித்துள்ளது.  ஸ்ரீதர் வெங்கேடசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவிஉள்ளிட்டோர் நடித்துள்ள என் பெயர் ஆனந்தன் படம் வரும் 27ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படம் சில திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுள்ளது.

இந்நிலையில் அதுல்யா ரவி குறித்து படக்குழு கூறியதாவது,

என் பெயர் ஆனந்தன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது அதுல்யா ஒரேயொரு படத்தில் தான் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் பிரபல இயக்குநர்களான சுசீந்திரன், சமுத்திரக்கனி ஆகியோரின் படங்களில் நடித்தார். இதையடுத்து தான் ஒரு பெரிய ஸ்டார் என்று நினைக்கத் துவங்கிவிட்டார் அதுல்யா.

ஒவ்வொரு முறை எங்கள் படத்திற்கு சர்வதேச விருது கிடைக்கும்போது, அது குறித்து ட்வீட் செய்ய மறுத்துவிட்டார் அதுல்யா. மேலும் போஸ்டர், டீஸர் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பட ரிலீஸின்போது அதுல்யா ரவியை வைத்து போட்டோஷூட் நடத்த திட்டமிட்டோம். ஆனால் 20 முறைக்கு மேல் கேட்டும் ஏதாவது காரணம் சொன்னாரே தவிர போட்டோஷூட்டுக்கு வர மறுத்தார். பட ரிலீஸுக்காக அவர் ஒன்றுமே செய்யவில்லை.

அவர் இன்னும் பெரிய ஸ்டார் எல்லாம் ஆகவில்லை. அவரின் படங்கள் வெற்றி பெறவில்லை. வளர்ந்து வரும் நடிகையான அதுல்யா இது போன்று மோசமான முன்னதாரணமாக இருப்பது ஏமாற்றமாக இருக்கிறது. ட்விட்டர் பயோவில், நான் கோவை தமிழ் பொண்ணு என்று பெருமையாக சொல்லும் இந்த அதுல்யா ரவி தான் ஒரு தமிழ் பட தயாரிப்பாளரின் வயிற்றில் அடிக்கிறார்.

தமிழ் பெண்களுக்கு போதிய வாய்ப்பு அளிப்பது இல்லை என்கிற புகார் உள்ளது. ஆனால் தமிழ் பொண்ணு என்பதால் தான் அதுல்யா ரவியை நடிக்க வைத்தோம். விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருமாறு அவரை கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

பெரிய இயக்குநர்களின் படங்கள் குறித்து மட்டுமே பேச விரும்புகிறார் அதுல்யா. கையில் ஒரு படம் கூட இல்லாதபோது கிடைத்த சிறு பட்ஜெட் படங்கள் பற்றி பேச மறுக்கிறார். ஹீரோ சந்தோஷ் போன்று அதுல்யாவுக்கு அர்ப்பணிப்பு இல்லை.

அனுஷ்கா, தமன்னா போன்ற பெரிய ஸ்டார்கள் எல்லாம் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அதுல்யா ரவி இப்படி செய்வது அவரின் வளர்ச்சிக்கு உதவாது என்று தெரிவித்துள்ளது.Trending Now: