ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 70 சதவீதம் பேரை வைரஸ் தொற்றில் இருந்து காப்பதாக தகவல்

23-11-2020 04:58 PM

ஆக்ஸ்போர்டு

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் அஸ்ட்ரா ஜெனாகா என்று மருந்து உற்பத்தி நிறுவனமும் இணைந்து தயாரித்த கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து 70 சதவீதம் பேரை கரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவதாக இடைக்கால தகவல்கள் கூறுகின்றன.

பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்துள்ள கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து வைரஸ் தொற்றிலிருந்து 95 சதவீதம் பேரை காப்பாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த இரண்டு நிறுவனங்களும் தற்காலிகமாக தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கும்படி அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளன.

அதே போல அவசர சிகிச்சைக்கு தங்கள் தடுப்பூசி மருந்தை பயன்படுத்த அனுபவிக்கும்படி தாங்களும் அரசை கேட்கப் போவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பைசர் .மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளுக்கு இல்லாத சிறப்பு அம்சம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி மருந்து உள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி மருந்தை சாதாரண ரெப்ரிஜிரேட்டர் வைத்திருந்து பயன்படுத்தலாம் அதனால் தடுப்பூசி மருந்து விநியோகம் செய்வதும் பயன்படுத்துவதும் பொதுமக்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் பெரிய பிரச்சனையாக நேராது என்று கூறப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து உருவாக்கியிருப்பதாக முதலில் அறிவித்தது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.Trending Now: