முப்தி மீது தேசத்துரோக நடவடிக்கை: பா.ஜ.க வலியுறுத்தல்

24-10-2020 01:00 PM

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு மீண்டும் மாநில அந்தஸ்தையும் அரசியல் சட்ட விதி 370 இங்கு சிறப்பு அதிகாரத்தையும் வழங்குவதற்காக சட்டபூர்வமான போராட்டத்தை தொடர்ந்து தனது கட்சி மேற்கொள்ளும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சயீத் சனிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான கொடியை ஏற்ற முடியாத நிலையில் தேசியக்கொடியை ஏற்ற மாட்டோம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு உரிய சிறப்பு கொடி கிடைக்கும் வரை, தேசியக் கொடியை ஏற்ற போவதில்லை என்று முப்தி முகமது சயீத் கூறினார்.

முப்தி முஹம்மது சையித்தின் பேட்டியை ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கடுமையாகக் குறை கூறினார்.

சயீத் செய்தியாளர்களிடம் கூறிய கருத்தின் அடிப்படையில் அவர் மீது யூனியன் பிரதேச ஆளுநர் மனோஜ் சின்ஹா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முப்தி கூறிய கருத்துக்கள் தேசவிரோத கருத்துக்கள். அதற்காக அவர் மீது தேச விரோத நடவடிக்கைகளுக்கான தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரவீந்தர் கேட்டுக்கொண்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அமைதி நிலையை குலைக்க யாரையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு கொலைக்காரன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் அவர் திருடிய பொருட்களைக் கட்டாயம் திருப்பி கொடுத்தாக வேண்டும். அதில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கொடியைப் அழித்துவிட்டது. அதன் உரிமைகளைப் பறித்து விட்டது அதன் சிறப்பு அந்தஸ்தை பறித்துவிட்டது. இவற்றை மத்திய அரசு கட்டாயம் திருப்பி கொடுத்தாக வேண்டும். அரசியல் சட்டம் சிதைக்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று முப்தி குறிப்பிட்டார்.

தேசியக்கொடி தொடர்பாக முப்தி கூறிய கருத்துக்களை காங்கிரஸ் கட்சியும்

இத்தகைய கருத்துக்களை எந்தச் சமூகமும் ஏற்றுக் கொள்ளாது பொறுத்துக் கொள்ளவும் இயலாது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரவீந்தர் ஷர்மா கூறினார்.Trending Now: