ஆளுநர், முதலமைச்சரின் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து செய்தி

24-10-2020 11:36 AM

சென்னை

நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை திருநாளும், பத்தாவது நாளில் விஜயதசமி திருநாளும் தமிழகமெங்கும் நாளை (அக்டோபர் 25) கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு முதலமைச்சர் பழனிசாமி விஜயதசமி வாழ்த்து

விஜயதசமி திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி. 

வாழ்த்துக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

             “On the happy and auspicious occasion of Vijaya Dasami,
I  extend my warm greetings to you and your family members.

May prosperity, peace and happiness be showered on you and your family in bountiful measure by the grace of the Almighty.”

ஆளுநர் வாழ்த்து

தனக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததோடு, விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்களையும் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.


முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள “ஆயுத பூஜை” மற்றும் “விஜயதசமி” வாழ்த்துச் செய்தி:

   நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை திருநாளையும், அதற்கடுத்த பத்தாவது நாளில் விஜயதசமி திருநாளையும் பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு  மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  

   மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம் மற்றும் கல்வி ஆகியவை இன்றியமையாதது ஆகும். மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் ஆற்றலில் மிகுந்து, செல்வத்தில் சிறந்து, கல்வியில் உயர்ந்து விளங்கிட மலைமகளையும், திருமகளையும், கலைமகளையும் போற்றி வணங்குவது நவராத்திரி பண்டிகையின்  சிறப்பாகும். 

   செய்யும் தொழிலே தெய்வம் என்று மதித்து, தொழிலின் மேன்மையை போற்றும் வகையில், மக்கள் தங்களது தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளை பூஜைக்குரிய பொருட்களாக வைத்து, மேன்மேலும் தொழில் வளர இறைவனை வேண்டி வழிபட்டு "ஆயுத பூஜை"" திருநாளை கொண்டாடுவார்கள்.

   விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் இறைவனை வணங்கி, கல்வி, கலை, தொழில் போன்ற நற்காரியங்களை தொடங்கி வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள்.

     இந்த சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்  தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
Trending Now: