மருது பாண்டியர் சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம் – தமிழக அரசு சார்பில் மலர் மரியாதை

24-10-2020 11:12 AM

சென்னை

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னரும் இந்திய சுதந்திர போராட்ட வீரரும் ஆன மாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் (பெரிய மருது, சின்ன மருது) 219ம் ஆண்டு நினைவு தினம் இன்று (அக்டோபர் 24ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

மருது சகோதரர்களின் சிலைக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மருது பாண்டியர் சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி டுவிட்டரில் புகழாரம் செலுத்தியுள்ளார்.

தமிழ் சொந்தங்களுக்கு விடுதலை வேட்கையை விதைத்து, நம் தாய்த் திருநாட்டிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரையிலான காலக்கட்டத்தில் போராடிய மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு தினத்தில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும், வணங்கி போற்றுகிறேன்.

தேசத்தின் அனைத்து குழுக்களையும் ஒன்றாக இணைக்க முயற்சித்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடைசிவரை போராடி, தங்கள் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ்மகன்களான பெரிய மருது, சின்ன மருது எனும் மருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறேன்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மரியாதை

பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களின் 219ஆம் நினைவு நாளில்,  நினைவிடத்தில் உள்ள மருது சகோதரர்களது திருவுருவச் சிலைக்கு   மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய, பின்னர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
Trending Now: