சங்கனா சேரி தொகுதி சட்டம ன்ற உறுப்பினர் சி.எப்.தாமஸ் மரணம்

27-09-2020 02:45 PM

கேரளா, செப்.28- 

கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.எப். தாமஸ் எம்.எல்.ஏ நேற்று  மரணம் அடைந்தார் அவருக்கு வயது 81.

கேரள காங்கிரஸ் (மாணி ) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.எப்.தாமஸ். 1939-ம் ஆண்டு சி.டி. பிரான்சிஸ் - அன்னம்மா தம்பதி களுக்கு மகனாக பிறந்தார். கெ.எஸ். யு  இளைஞர் அமைப்பின் மூலமாக அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த அவர் 1964-ம் ஆண்டு கேரள காங்கிரசில் இணைந்தார். பின்னர் கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியுடன் இணைந்து பணியாற்றினார். அந்த கட்சியில் தற்போது துணை தலைவர் பதவி வகித்து வந்தார். சங்கனாச்சேரி தொகுதியில் 1980-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 9 முறை எம்.எல்.ஏ வாக இருந்து வருகிறார். 2001 - 2006 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கிராம வளர்ச்சி துறை மந்திரியாக இருந்தவர். இவரது மனைவி குஞ்ஞம்மாள் .சை ஜு,  அனு  ஆகிய 2 மகன்களும் சினி என்ற ஒரு மகளும் உள்ளனர். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு ஏற்கனவே வேலூர் மருத்துவ மனையில் சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சிகிட்சை அளிக்கப்பட்டது. தற்போது திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிட்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

# 1 சி.எப். தாமஸ் எம்.எல்.ஏTrending Now: