மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் டூயட் பாடிய எஸ்பிபி!

27-09-2020 07:12 AM

தமிழ்த் திரையுலகில் கடந்த 50 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் எஸ்பி பாலசுப்பிரமணியம். அவருடன் இணைந்து டூயட் பாடிய பாடகிகள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள்.

அப்படி அவருடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பாடியிருக்கிறார். 1974ம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'வைரம்'.

டி.ஆர். பாப்பா இசையில் அந்தப் படத்தில் இடம் பெற்ற 'இரு மாங்கனி போல் இதழோரம்...' என்ற பாடல் எஸ்பிபி, ஜெயலலிதா இருவரும் பாடியிருக்கிறார்கள்.

இந்த செய்தி எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்குப் பிறகு தற்போது வைரலாகி வருகிறது.Trending Now: