ஓ எம் ஆர் டோல்கேட்களில் சுங்கக் கட்டணஉயர்வு அறிவிப்பு, ஆட்டோவும் கட்டணம் செலுத்த வேண்டும்

26-09-2020 04:36 PM

சென்னை:

சென்னை பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும்போது சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டணம் 1.10.2020 முதல் டோல்கேட்களில் வசூலிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை - ராஜீவ் காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலை சுங்க கட்டணம் 10 சதவீதம் உயர்வு. 

அக்டோபர் 1, 2020 இலிருந்து ஜூன் 30, 2022 வரை இந்த சுங்கக் கட்டணங்கள் பொருந்தும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பழைய கட்டணம்: கார்-ரூ25-, இலகுரக வாகனம்-ரூ41, பேருந்து -ரூ65, சரக்கு வாகனம் ரூ-97, கனரக வாகனம்-ரூ193

கார், ஆட்டோ, இலகுரக வாகனம், பேருந்து, சரக்கு வாகனம், கனரக வாகனங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டண விவரம்:

ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்களுக்கு ஒரு நடைக்கு ரூ.10-ம், திரும்பிவர ரூ.19ம், தினசரி கட்டணம் ரூ. 33 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 சக்கர வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் ரூ.311, மாதாந்திர எல்.சி.எம் கட்டணம் ரூ.300ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கார்கள் ஒரு நடைக்கு ரூ.30ம், ஒருமுறை சென்றுவர ரூ.60ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கார்களுக்கு தினசரி கட்டணம் ரூ.100, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.2,390ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கு மாதாந்திர எல்.சி.எம் கட்டணம் ரூ.300,

நடை அடிப்படையிலான பாஸ் கட்டணம் ரூ.1,100 ஆகும்.

இலகுரக வாகனங்கள் ஒரு நடை செல்ல ரூ.49 கட்டணம், திரும்பி வர ரூ.98, தினசரி ரூ.100 என சுங்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்த முறைதான் ஆட்டோவிற்கும் சுங்கக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Trending Now: