பார்ட்டிக்கு வரும் பெண்களை போதை வஸ்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்வதும் உண்டு - ஸ்ரீ ரெட்டி

18-09-2020 06:52 AM

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல பிரபலங்களுக்கு எதிராக சர்ச்சையை உருவாக்கியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

கடந்த சில மாதங்களாக அமைதி காத்து வந்த இவர், இப்போது சில நாட்களாக கன்னட, தெலுங்கு திரையுலகில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் பிரபலங்கள் போலீஸ் வளையத்தில் சிக்கி வருகின்ற இந்த நிலையில் தாமாக என்ட்ரி கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி, 

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

“தெலுங்கு திரையுலகில் பிரபலங்கள் பலரும் போதை பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற பார்ட்டிகள் இங்கே அதிகம் நடக்கும். அப்போது அங்கே போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்கப்படும். அதுமட்டுமல்ல, பார்ட்டிக்கு வரும் பெண்களை போதை வஸ்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்வதும் கூட நடக்கிறது. எனக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால், போதைப்பொருள் பயன்படுத்தும் பிரபலங்கள் யார் யார் என்பதை நான் வெளியிட தயார்” என்று கூறி மீண்டும் தெலுங்கு திரையில் உலகத்தை பரபரப்புக்கு உள்ளாகியுள்ளார்.Trending Now: