கச்சா எண்ணெய் ஏற்றிவர சீன எண்ணெய் கப்பல்கள் இனிமேல் கிடையாது: இந்தியா முடிவு

13-08-2020 07:16 PM

புதுடெல்லி

வெளிநாடுகளில் இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெயை இந்தியா கொண்டுவருவதற்கு இனிமேல் சீன எண்ணெய் கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவது இல்லை என்று இந்திய எண்ணெய் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன.

சீன நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள எண்ணெய் கப்பல் கம்பெனிகளின் கப்பல்களையும் வாடகைக்கு அமர்த்துவது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவுடனான வர்த்தக உறவுகளை குறைத்துக்கொள்வது என சென்ற மாதம் இந்திய அரசு முடிவு செய்தது.

இந்திய - சீன எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நடந்துகொள்வதை கண்டிக்கும் வகையிலும் இந்திய வீரர்கள் குழுவதற்கு எல்லையில் நடந்த கைகலப்பில் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் போக்கில் இந்திய சீன வர்த்தக உறவுகளை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்திய என்ணெய்க் கம்பெனிகள் தாங்கள் வாங்கிய கச்சா எண்ணெய் இந்தியா கொண்டுவருவதற்கு உலக அளவில் டெண்டர் வெளியிட்டு, வெளிநாட்டு கப்பல் கம்பெனிகளை தேர்வு செய்கின்றன. இதற்கான ஒப்பந்தங்களில் ஒரு ஷரத்து நிரந்தரமாக உள்ளது. இதன்படி வெளிநாட்டு கம்பெனிகளுடன் கச்சா எண்ணெய்யை இந்தியா கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டாலும். வெளிநாட்டு கம்பெனிகள் குறிப்பிட்ட கட்டணத் தொகையை இந்தியக் கம்பெனிகள் பெற்றுக் கொள்ள சம்மதித்தால் வெளிநாட்டு கப்பல் கம்பெனிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, இந்திய கம்பெனிக்கு அதே ஒப்பந்தத்தை வழங்க இந்திய எண்ணெய்க் கம்பெனிகளுக்கு உரிமம் தரப்பட்டுள்ளது.

இதன்படி சீனக் கம்பெனிகள் உடனான ஒப்பந்தத்தை இந்தியா ரத்துச் செய்ய இயலும்.

அது தவிர புதிய வழிகாட்டு டெண்டர்களை இந்தியா வெளியிடும் பொழுது சீன கம்பெனிகளின் ஒப்பந்தப் புள்ளிகளை பரிசீலிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.

சீன கம்பெனிகளை ஒப்பந்தப்புள்ளிகள் வழங்குமாறு கோர வேண்டிய நிர்பந்தமும் கிடையாது என்று இந்திய எண்ணெய் கம்பெனிகள் தெரிவித்தன.Trending Now: