ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட கேன்சர் நோயாளியை 3-வது மாடிக்கு அழைத்த சார்பதிவாளர் பணியிடை நீக்கம் மந்திரி ஜி. சுதாகரன் உத்தரவு

12-08-2020 06:24 PM

நில விற்பனை பத்திர பதிவுக்காக கட்டப்பனை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட கேன்சர் நோயாளியை அலுவலகத்தின் 3-வது மாடிக்கு அழைத்து வரச் சொல்லி கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம் மந்திரி ஜி. சுதாகரன் உத்தரவிட்டு உள்ளார்.

சம்பவம் குறித்து விபரம் வருமாறு:-

கேரள மாநிலம் கட்டப்பனையை சேர்ந்தவர் சனீஷ் இவர் கருணா சேரி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு புற்று நோய் பாதித்தது. படுத்த படுக்கையாக இருந்த சனீஷ் மருத்துவ செலவுக்கு தனது வீட்டை விற்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் அவரை கட்டப்பனை சார் பதிவாளர் அலு வலகத்திற்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். பத்திர பதிவு அலுவலகம் 3 - வது மாடியில் இருந்ததால் ,  நோயாளியால் வர முடியாத நிலையினை சார் பதிவாளர் ஜி.  ஜெயலெட்சுமியிடம் உறவினர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் மறுத்து விட்டார்.

இதை தொடர்ந்து சனீசின் உறவினர்கள் அவரை தூக்கி 3-வது மாடியில் உள்ள சார் பதிவாளரின் இருக்கை அருகே கொண்டு சென்றனர் . தொடர்ந்து பத்திர பதிவு நிகழ்வுகள் நடந்து முடிந்தது. இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில்  சிகிட்சை பலனின்றி சனீஷ் உயரிழந்தார்.

இந்த நிலையில்  கட்டப்பனை சார்பதிவாளர் அலுவலகத்தில் கேன்சர் நோயாளிக்கு நடந்த  கொடூரமான அனுபவம் குறித்து சனீசின் நண்பர்களில் ஒருவர் சமூக வளைத் தளத்தில் பதிவு போட்டு இருந்தார். இந்த பதிவு குறித்து கேரள பொதுப்பணித் துறை மற்றும் பத்திர பதிவு .துறை மந்திரிக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து  , கட்டப்பனை சார் பதிவாளர் ஜி.ஜெயலெட்சுமியை உடனடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பத்திர பதிவுத் துறை இணை செயலாளருக்கு மந்திரி . ஜி. சுதாகரன் உத்தரவிட்டு உள்ளார்.Trending Now: