சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கரோனா தொற்றால் மரணமடைந்தார்

10-08-2020 09:51 AM

மதுரை

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இரட்டை மரண வழக்கில் கைதான சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இன்று மரணமடைந்தார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் (கடந்த ஜூன் மாதம்)  ஆகியோரின்  இரட்டை கொலை வழக்கு விசாரணையில் சாத்தான்குளம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் இருந்த நிலையில் கடந்த ஜூலை 24ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், பால்துரையின் மனைவி  மங்கயர்திலகம் தனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி நேற்று முன்தினம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த நிலையில் அவருக்கு சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டது.

சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2:30 மணியளவில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தொலைபேசி மூலமாக தகவல் அளித்து பால்துரையின் மனைவி மங்கையர் திலகம் கூறியபோது:

எனது கணவருக்கும் கொலை வழக்குக்கும் சம்மந்தம் இல்லை என கூறினால் மட்டுமே உடலை பெறுவோம் எனக்கூறியுள்ளார்.Trending Now: