சிவில் சர்வீஸ் தேர்வில் அறிஞர் அண்ணாவின் கொள்ளு பேத்தி தேர்ச்சி

08-08-2020 02:41 PM

சென்னை,

சிவில் சர்வீசஸ் தேர்வில் பேரறிஞர் அண்ணாவின் கொள்ளு பேத்தி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2019ம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தியது. இத்தேர்வுக்கான ரிசல்ட் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் பேரறிஞர் அண்ணாவின் கொள்ளு பேத்தி பிரித்திகா ராணி(23) தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் அகில இந்திய அளவில் 171வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அதுவும் தனது முதல் முயற்சியிலே 171வது இடத்தை பிடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இந்திய அயல் பணி (ஐஎப்எஸ்) இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.Trending Now: