தங்க மதிப்பில் 90% அடமான கடனாக வழங்க இந்திய ரிசர்வ் வங்கி ஆணை

06-08-2020 02:57 PM

மும்பை

தனியார் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தங்க நகை அடமான கடன் பெற வரும்பொழுது நகையின் மதிப்பில் 90 சதவீதத்தை கடனாக வழங்கும்படி வங்கிகளில் இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.விவசாயம் சாராத நடவடிக்கைகளுக்காக தனியார் மற்றும் சிறுதொழில் முனைவோர் தங்க நகையை அடமானம் வைத்து கடன் பெற வரும்பொழுது. நகையின் மதிப்பில் 75% கடனாக வழங்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. 

இந்த சுற்றறிக்கை கூறப்பட்டுள்ள நகையின் மதிப்பில் 75% என்று இருப்பதை 90% என்று உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி புதிய சுற்றறிக்கைகள் வியாழன் அன்று வெளியிட்டது.

இந்தப் புதிய  சுற்றறிக்கை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விட கூடுதல் நகை அடமானம் கடன் உதவக்கூடும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை

2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தங்க விலை உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாவற்றிலும் தங்க விலை உயர்ந்து வருகிறது.

மார்ச் மாதத்திலிருந்து 25% தங்க விலை உயர்ந்து இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.

சென்னையில் தங்க விலை

தொழில்துறை முதலீடு.தொழில்துறை உற்பத்தி உயரும் வரை தங்க விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று சந்தேக நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்கு தங்க விலை ஏற்றத்தாழ்வுகள் உடன் நீடிக்கும். ஆனால் ஒட்டுமொத்த உயர்வு நிலை காணப்படும். இரண்டாண்டு காலத்தில் 24 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூபா 65,000 எட்டிவிடும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக தொழில் வர்த்தக நிலை 100 சதவீத அளவு இன்னும் மேம்படவில்லை அதனால் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது சிறு தொழில் வர்த்தக நிலையங்கள் சிக்கலில் தவிக்கின்றனர் தங்கள் கைவசம் உள்ள சிறு நகைகளை வங்கிகளுக்கு அடமான கடன் பெற சென்றால் பழைய தங்க விலை மதிப்பில் மட்டுமே கடன் தர வங்கிகள் முன்வருகின்றன.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் இன்றைய சுற்றறிக்கை சாதாரண பொதுமக்களுக்கு பெரிதும் நிவாரணம் அளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.Trending Now: