அரசியல் சட்ட விதி 370 ரத்து செய்தது சட்டவிரோதமான செயல்: சீனா கருத்து

05-08-2020 04:50 PM

பெய்ஜிங்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த அரசியல் சட்ட விதி 370 இந்திய அரசு ரத்து செய்தது சட்டவிரோதமான நடவடிக்கை என சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் வாங்வென் பின் இன்று கூறினார்.

சீன செய்தியாளர் ஒருவர் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்ட விதி 370 ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு வருகிறது இது குறித்து சீனாவின் கருத்து என்ன என்று கேட்டார்.

இந்தப் பிரச்சனை ஜம்மு காஷ்மீர் தோன்றிய நாளில் இருந்து இன்று வரை இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் தான் என்று கூறினார் வாங்வென் பின்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக மாற்றம் செய்ய வேண்டுமென்றால் இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக மாற்றத்தை செய்திருக்கலாம். ஆனால் தன் இஷ்டப்படி இந்தியா காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்திருக்கிறது என்ற நடவடிக்கை சட்டவிரோதமானது நீதிமன்றங்கள் முன் ஏற்கத்தக்கது அல்ல.

முன்னரே கூறிய இந்தக் கருத்தை இப்பொழுது மீண்டும் தெரிவிப்பதாக வாங்க வென் பின் புதனன்று கூறினார் .

இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள் அதை மாற்ற முடியாது. இரு நாடுகளின் நலனுக்காக இருதரப்பினரும் சுமூகமாக பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று வாங்வென் பின் கூறினார்.Trending Now: