பாஜ தலைவர் நட்டாவை சந்தித்த திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்: ஸ்டாலின் அறிவிப்பு

05-08-2020 12:20 PM

சென்னை, 

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்த திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை - ஆயிரம் விளக்கு தொகுதி  திமுக எம்எல்ஏ கு.க.செல்வம், நேற்று  திடீரென டில்லியில் பாஜக. தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார், இந்த சந்திப்பு திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கந்தர் சஷ்டியை  இழிவுப்படுத்தியவர்களை கண்டிக்க வேண்டும்,என்றும் உட்கட்சித்தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தினார், திமுகவில் இருந்து  விலகி கு.க.செல்வம் பாஜவில் விரைவில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது, அதன் முதற்கட்டமாக அவர் பாஜ தலைவர் நட்டாவை சந்தித்ததாக தெரிகிறது 

இந்த நிலையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட  அறிவிப்பு

தி.மு.க. தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் (05-08-2020) விடுவிக்கப்படுகிறார்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார் Trending Now: