ஏழு வருட காதலுக்கு பிறகு திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை!!

03-08-2020 08:15 PM

மம்முட்டியின் மாமாங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தவர் பிராச்சி தெஹ்லான். 

டெல்லியை சேர்ந்த பிராச்சி தெஹ்லான் கைப்பந்து வீராங்கனையாகவும் இருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். பிராச்சிக்கு திருமணம் முடிவாகி உள்ளது. ரோகித் சஹோரா என்ற தொழில் அதிபரை மணக்கிறார்.

இதுகுறித்து பிராச்சி கூறும்போது, 

“ரோகித்தும் நானும் 7 வருடங் களாக காதலிக்கிறோம். ஒரு உறவினர் திருமணத்தில் சந்தித்த நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். எங்கள் திருமணம் வருகிற 7-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. ஊரடங்கினால் 50 பேரை மட்டும் திருமணத்துக்கு அழைத்துள்ளோம். திருமணத்துக்கு வருகிறவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளோம்” என்றார்.Trending Now: