திரைபடங்களில் கவர்ச்சி காட்ட விரும்பாத நித்யா மேனன், வெப் சீரிஸில் நடித்த லெஸ்பியன் "லிப் லாக்" முத்தக்காட்சி!

16-07-2020 07:42 AM

அழுத்தமான, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். 

இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் வெப்பம் போன்ற திரைபடங்களில் நடித்து பிரபலமானார். 

சமீபத்தில் மெர்சல் மற்றும் சைக்கோ திரை படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ள வெப் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  'பிரீத் - இன் டு த ஷேடோஸ்' என்ற அந்த வெப் தொடர் சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. 

அதில் நடிகை நித்யா மேனன் மற்றொரு நடிகையான சுருதி பாப்னா என்பவருடன் லிப்லாக் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். காருக்குள் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.Trending Now: