கன்னட ரஜினி மற்றும் கிறிஸ்தவ விஜய் என் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள்! - மீரா மிதுன்

15-07-2020 08:06 AM

தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ள மீரா மிதுன்.

சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்புக்கு உள்ளாவது வழக்கமான ஒன்றாகும்.

சமீபத்தில் நடிகை த்ரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சர்ச்சையை கிளப்பினார் மீரா.

தற்போது அவர் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை வம்பிழுத்து டிவீட் செய்துள்ளார். அதில், தமிழ்நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பத்திரமாக இருங்கள். நான் நல்ல சொகுசான இடத்தில் பாதுகாப்பாக தான் இருக்கிறேன். கன்னட ரஜினிகாந்த் மற்றும் கிறிஸ்தவ விஜய் ஆகியோர் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்?! சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், என புலம்பியுள்ளார் மீரா மிதுன்.Trending Now: