மின்சார ஊழியர்களுக்கு மின் கணக்கிடு செய்வதற்கு பெருக்கல் வாய்ப்பாடு சொல்லி தரும் நூதன ஆர்ப்பாட்டம்.

14-07-2020 03:36 PM

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளதை கண்டித்து சிறுவர்கள் மின்சார ஊழியர்களுக்கு  மின் கணக்கிடு செய்வதற்கு பெருக்கல் வாய்ப்பாடு சொல்லி தரும்  நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது இதனால் மின் கட்டணம் கணக்கிடு செய்யமுடியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் சில  விளக்குகளை தமிழக அரசு அளித்ததை தொடர்ந்து தற்போது மின் கணக்கிடும் பணி ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரத்துறை ஊழியர்களால் செய்யப்பட்டு வருகிறது. நான்கு மாத காலங்கள் மின்கட்டணம் கணக்கீடு  எடுக்காததால் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார கட்டணம் என்பது தாறுமாறாக எகிறி இருப்பதாக பொதுமக்கள் அரசியல் கட்சிகள் உள்பட அனைத்துத் தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் ஊரடங்கை பயன்படுத்தி தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது அதனை முற்றிலுமாக மறுத்த தமிழக அரசு நான்கு மாதங்கள் சேர்த்து எடுத்ததால் தான்  மின்கட்டணம்  கூடுதலாகி இருப்பதாக  விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் மின்சார துறையில் பணியாற்றும் மின் ஊழியர்களுக்கு மின் கணக்கிடும் முறை குறித்தும் மின் கணக்கீடு செய்யும்போது பெருக்கல் முறையாக செய்ய வேண்டும் என்பதற்காக பெருக்கல் வாய்ப்பாட்டை மின்சார ஊழியர்களுக்கு சொல்லித் தரும் விதமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சிறுவர்களை வைத்து மின்சார ஊழியர்களுக்கு பெருக்கல் வாய்ப்பாடு சொல்லி தரும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தாததால் அவர்களின் வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க கூடாது என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் சிறுமிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.Trending Now: