கேரளா தங்க கடத்தல்: சொப்னா பெங்களூரில் கைது

12-07-2020 12:44 PM

பெங்களூர்

கேரளா மாநில தலைநகரான திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை கடத்த நடந்த முயற்சி தொடர்பாக முதல் குற்றவாளியாக  குற்றம் சாட்டப்பட்டுள்ள சொப்னா சுரேஷ் பெங்களூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

அவருடைய கூட்டாளியான சந்தீப் நாயர் மைசூர் நகரில் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் நகரிலிருந்து கரோனா வைரஸ் தொற்று பரவ லைத் தடுப்பதற்காக மூன்று சுற்று தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சொப்னா சுரேஷ் எப்படி பெங்களூர் சென்றார் என்பது மர்மமாக உள்ளது.

சொப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டது தொடர்பாக தேசிய ஆய்வு ஏஜென்சி வட்டாரத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சொப்னா சுரேஷ்  மகள் தன்னுடைய கல்லூரி நண்பருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது .சொப்னா சுரேஷ்  மகள் யாருடன் தொடர்பு கொள்வார் என யூகித்த தேசிய ஆய்வு ஏஜென்சி அவர்கள் தொலைபேசி எண்களுக்கு வரும் அழைப்புகளையும் அந்த எண்களில் இருந்து செல்லும் அழைப்புகளையும் ஆடியோ பதிவு செய்து வருகிறது .அப்படி பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவை பரிசீலித்த பொழுது சொப்னா சுரேஷ்  மகள் அழைப்பு பற்றிய தகவல் கிடைத்துள்ளது .அவர் எங்கிருந்து பேசியுள்ளார் என்பதை ஆய்வு செய்த பொழுது அவர் பெங்களூரில் இருந்து பேசினார் என்பது தெரியவந்தது. உடனே கர்நாடக மாநிலத்தில் உள்ள தேசிய ஆய்வு ஏஜென்சி முடுக்கிவிடப்பட்டது அவர்கள் சொப்னா சுரேஷ் தங்கியுள்ள விடுதியை உறுதிசெய்து தெரிவித்தனர் .பெங்களூரிலிருந்து தகவல் கிடைத்ததும் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற தேசிய ஆய்வு ஏஜென்சி அதிகாரிகள் சொப்னா சுரேஷின் ஆர்ப்பாட்டமின்றி கைது செய்தனர்.

சந்தீப் நாயர் கைது செய்யப்பட்டதற்கு அவர் தனது சகோதரருக்கு தொலைபேசியில் பேசியது தான் காரணம் என்று தேசிய ஆய்வு ஏஜென்சி அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது .

நாயர் வீட்டில் தேசிய ஆய்வு ஏஜென்சி அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது சந்தீப் நாயரின் தொலைபேசி அழைப்பு வந்தது. யாரிடமிருந்து போன் என்று அதிகாரிகள் கேட்டதற்கு வழக்கறிஞரிடம் இருந்து போன் என்று அவர் சகோதரர் பதிலளித்துள்ளார். 

ஆனால் தேசிய அறிவு ஏஜென்சி அதிகாரிகள் அந்த எண்ணைக் குறித்துக் கொண்டு அந்த எண் யாருடைய என்று கண்டு பிடிக்கும்படி தெரிவித்தனர். 

அந்த ஆய்வில் அது சந்திப்பு நாயரின் அழைப்பு என்றும் அவர் மைசூரிலிருந்து பேசியதும் உறுதியாகிவிட்டது. அதைத் தொடர்ந்து மைசூரில் இருந்து சந்தீப் நாயர் தப்பவிடாமல் பார்த்துக் கொள்ளும்படி கர்நாடக மாநில தேசிய ஆய்வு ஏஜென்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கர்நாடக மாநில தேசிய ஆய்வு ஏஜென்சி சந்தீப் நாயர் தங்கியுள்ள இடத்தை உறுதி செய்து தகவல் தெரிவித்தனர்ய

திருவனந்தபுரத்திலிருந்து சென்ற தேசிய ஆய்வு ஏஜென்சி குழு மைசூருக்கு நேரில் சென்று சந்தீப் நாயரை கைது செய்தனர்.

பெங்களூரில் கைது செய்த சொப்னா சுரேஷ்,  மைசூரில் கைது செய்த சந்தீப் நாயரையும் கொச்சி நகருக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருவரும் கொச்சி நகருக்கு வந்ததும் கொச்சி நகர மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் காணொளி காட்சி மூலம் ஆஜர் செய்யப்படுவார்கள் .அதன் பிறகு காவல் உத்தரவைப் பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரையும் தேசிய ஆய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொப்னா சுரேஷ்

பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக  வெளியான தகவலை திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் வட்டாரங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

மூன்று வட்ட  காவலைத்தாண்டி சொப்னா சுரேஷ்  பெங்களூர் சென்றிருக்க முடியாது அவ்வாறு அவர் சென்றிருந்தால் அவரது கார் எண் பதிவு செய்யப்பட்டிருக்கும் .அவரும் தடை செய்யப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு இருப்பார் அதனால் சொப்னா சுரேஷ்  பெங்களூர் சென்றதாக கூறமுடியாது .பெங்களூரில் கைது செய்யப்பட்ட அவரை ஏன் கொச்சிக்கு அழைத்து வர வேண்டும்? முறையாக திருவனந்தபுரத்துக்கு தானே அழைத்து வர வேண்டும் .எனவே கொச்சியில் தான் சொப்னா கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

மூன்று நீதிமன்றங்கள்

கேரள மாநில தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து சுயேச்சையான மூன்று பிரிவுகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்

1 சுங்கத்துறை

2 தேசிய விசாரணை ஏஜென்சி

 3 சிபிஐ.

சுங்கத்துறை தொடர்பான வழக்குகள் பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் .

தேசிய விசாரணை ஏஜென்சி தனக்கென தனி நீதி மன்றத்தை பெற்றுள்ளது.

 அதேபோல சிபிஐயும் தனி நீதி மன்றத்தை தன்னுடைய நீதிபதிகள் மூலம் நடத்தி வருகிறது.

 இந்த மூன்று நீதிமன்றங்களும் விசாரணையில் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும் .இல்லாவிட்டால் வழக்கு பெரும் சிக்கலாகி விடும் என்று அஞ்சப்படுகிறது. இத்தகைய குழப்பத்தையும் சிக்கலையும் பயன்படுத்தி குற்றவாளிகள் எளிதாக தப்பித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.Trending Now: