விஜய்யின் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

09-07-2020 08:15 AM

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களை தயாரிப்பாளர்கள் ஓடிடி மூலம் வெளியிட தயாராகி வருகின்றனர்.

ஏற்கனவே ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் போன்ற படங்கள் ஓடிடியில் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே புதிய படங்களையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். 


அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓடிடி தளங்கள் பெரும் தொகை கொடுக்கத் தயாராக இருந்தும், ரசிகர்கள் தனது படத்தை தியேட்டரில் கண்டு ரசிக்க வேண்டும் என விஜய் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படம் ரிலீசாகாவிட்டாலும், விஜய்யின் மற்றொரு படம் ஓடிடியில் ரிலீசாக இருக்கிறது. தமிழில் வெற்றியடைந்த படமான விஜய்யின் ஜில்லா தான் அது. 

தெலுங்கு ரசிகர்களுக்காக நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தாவை வைத்து சில காட்சிகள் ஜில்லா படத்தில் எடுக்கப்பட்டு தமிழில் அந்த காட்சிகள் சேர்க்காமல் நீக்கப்பட்டிருந்தது. எனவே தற்போது தெலுங்கில் வெளியாவதால் மீண்டும் நீக்கப்பட்ட காட்சிகள் இணைக்கப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்காகவே எக்ஸ்குளூசிவ் ஆக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.Trending Now: