ராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்!

08-07-2020 07:08 AM

இந்தியாவில் கொரானோ ஊரடங்கு வந்து எல்லோரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இணையதளங்களில் படத்தை வெளியிட்டு படு பிசியாக பணிபுரிந்து வருகிறார்.

இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என 'கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்' இரு படங்களின் வெற்றியின் மூலம் நிரூபித்தார் ராம்கோபால் வர்மா.

தற்போது அதனை தொடர்ந்து திரில்லர் எனும் அடுத்த திரைப்படத்தை வெளியிட தயாராகி வருகிறார்.

இந்தப் படத்தில் அப்சரா ராணி என்பவரை அறிமுகம் செய்ய உள்ளார். அவரது ஆபாசமான புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஆரம்பித்துவிட்டார் வர்மா. 

அப்சரா ராணி டுவிட்டர் கணக்கை ஆரம்பித்தார். ஆரம்பித்த சில மணிநேரங்களில் பல ஆயிரம் பேர் வரை பாலோ செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்றால் பாருங்கள்.

இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து எத்தனை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து வெட்டவெளிச்சமாக தெரிகிறது.Trending Now: