தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளுடன் ஊரடங்கு: டீக்கடைகள், சலுான்கள் - ஆட்டோக்களுக்கு அனுமதி

05-07-2020 06:09 PM

 சென்னை, 

தமிழகம் முழுவதும் திங்கள் கிழமை (6-7-2020) முதல் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. டீக்கடைகள் சலுான்கள் இயங்கவும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவு வருமாறு:

திங்கள் கிழமை முதல் சென்னை காவல்துறை எல்லையில் நோய்க்கட்டுப்பாட்டு மையங்கள் தவிர மற்ற இடங்களில்  ஊரடங்கில் மேற்கொள்ளப்பட்ட தளர்வுகள் வருமாறு:

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்  தங்களது வாகனங்களில்  80 தொழிலாளர்களை அழைத்து சென்று பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது,  அனைத்து தனியார் அலுவலகங்கள் தொழில் நிறுவனங்கள், மற்றும் ஏறறுமதி நிறுவனங்கள்  50 சதவீதம் தொழிலாளர்களுடன் செயல்படலாம், மற்றவர்களை வீட்டிலேயே பணியாற்ற ஊக்கப்படுத்தலாம்,

வணிக வளாகங்கள்

வணிகவளாகங்கள் தவிர  அனைத்து ஷோரூம்கள் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது, கடைகளில் குளிர்சாதன வசதி  இருந்தால் அவற்றை பயன்படுத்தக்கூடாது: சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,

ஹோட்டல், டீக்கடை

ஹோட்டல்கள் உணவகங்கள், காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்படலாம்,ஆனால் பார்சல் அடிப்படையில் உணவு வழங்க வேண்டும், போன் மூலம் உணவப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது, மேற்கண்ட நபர்கள் அடையாள அட்டையுடன் இரவு 9 மணி வரை பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது,  காய்கறிக்கடைகள் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது,

தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம், ஆனால் பார்சல் அடிப்படையில் இயங்க வேண்டும்,

வாடகை வாகனங்கள்

வாடகை வாகனங்கள் மற்றும் டாக்சி போன்றவை  டிரைவர் தவிர மூன்று பயணிகளுக்கு மேலாக ஏற்றி செல்லக்கூடாது,  ஆட்டோக்கள்  டிரைவர்,  தவிர இரண்டு பயணிகளுடன் அனுமதிக்கப்படும், சைக்கிள் ரிக்ஷாக்களும்  இயங்கலாம், 

சலூன், இறைச்சி கடைகள்

பாபர் ஷாப்கள் சலுான்கள்,  பியூட்டி பார்லர்கள் குளிர்சாதன வசதிகள் இல்லாமல் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது,  மீன் கடைகள்,  கோழிக்கறி,  ஆட்டிறைச்சி, முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளியுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது, என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பிற கட்டுப்பாடுகள் தொடரும்

மறு உத்தரவு வரும் வரை வரும் மாநிலம் முழுவதும் 31 ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவில் பின்வரும் நடவடிக்கைகள்  தொடரும்,

அனைத்து மத வழிப்பாட்டு இடங்கள்,  புறநகர் பகுதிகளில் உள்ள மிகப்பெரிய வழிப்பாட்டுதலங்கள், அனைத்தும் மூடப்படும்,

கொடைக்கானல் மற்றும் நீலகிரி ஏற்காடு  போன்ற  சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தடை செய்யப்படும்,

அரசு ஊழியர்கள், காவல்துறையினர்,  சுகாதார பணியாளர்களின் தனிமைப்படுத்தல் தவிர மற்ற பணிகளுக்கு ஹோட்டல்கள் திறக்கப்படக்கூடாது

வணிக வளாகங்களுக்கு  தொடர்ந்து தடை அமலில் இருக்கும்,

பள்ளிகள் கல்லுாரிகள்,  கல்வி நிறுவனஙகள்  பயிற்சி நிறுவனங்கள் மீண்டும் மூடப்படுகிறது, ஆன்லைன் மற்று்ம் தொலை துார பயிற்சிகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தப்படும்

மத்திய உள்துறையால் அனுமதிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் தவிர மற்றவற்றிற்கு தடை செய்யப்படுகிறது,

மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்படுகிறது,

அனைத்து சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள்,  நீச்சல் குளங்கள்  பொழுது போக்கு பூங்காக்கள், பார்கள் மற்றும் அரங்கக்கூட்டங்கள், நடத்த தடை விதிக்கப்படுகிறது,  விளையாட்டு அரங்கங்கள் பார்வையாளர்கள் இல்லாமல் திறக்கலாம்,

அனைத்து சமூக அரசியல் விளையாட்டு பொழுது கல்வி கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு  தடை விதிக்கப்படுகிறது, 

உள் நாட்டு போக்குவரத்து  மாவட்டங்களில் பொதுபோக்குவரத்து ஆகியவற்றிற்கு 15  ம்தேதி  தடை செய்யப்படுகிறது,

சென்னை காவல்துறை எல்லை

சென்னை  காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளுர் நகராட்சி  கும்மிடிப்பூண்டி,  பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகள், பூந்தமல்லி, ஈக்காடு மற்றும் சோழாவரம் வட்டார கிராம பஞ்சாயத்துக்கள், சென்னை பெரு நகர காவல் எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு மாவட்டம்,  செங்கல்பட்டு மற்றும் மறைமலை நகர் நகராட்சிகள்  நந்திவரம்  கூடுவாஞ்சேரி  பேரூராட்சிகள்,  காட்டான்குளத்துார் வட்டாரத்தை சேர்ந்த கிராம பஞ்சாயத்துக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வரை கடந்த 5 ம்தேதி வரை  5 நாட்கள், தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இன்று அதிகாலை  முதல் 31 ம்தேதி வரை  அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் வருமாறு:

கிராமப்புறங்களில்  ரூ 10 ஆயிரத்திற்கு மிகாமல் வருமானம் உள்ள சிறுகோவில்கள், சிறு மசூதிகள்  தர்காக்கள் தேவாலயங்களை திறந்து வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறது,

பக்தர்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றி  அரசின்  நோய்க்கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடித்து நடக்கவேண்டும், மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மற்றும் மிகப்பெரிய கோவில்கள், மக்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்படும்,  அனைத்து தொழில்துறை, மற்றும் ஏற்றுமதி  தொடர்புடைய  நிறுவனங்கள்  நுாறு சதவீத ஊழியர்களுடன்  இயங்கலாம் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது, 20 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்தே இயங்க ஊக்கப்படுத்தலாம்,

தனியார் நிறுவனங்கள்

அனைத்து தனியார் நிறுவனங்களும்  நுாறு சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது, கூடுமானவரை ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்த வேண்டும்,

வணிக வளாகங்கள்

வணிக வளாகங்கள் தவிர பெரிய ஜவுளிக்கடைகள்,  நகைக்கடைகள், 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது, குளிர்சாதன வசதிகளை இயக்காமல்,  சமூக இடைவெளியுடன் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களுடன் அனுமதிக்கலாம்,

டீக்கடைகள்,  உணவகங்கள் காய்கறிக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கலாம், சில்லறை விற்பனை மதுக்கடைகள்,  காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படும்,.

உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் சமூக இடைவெளியுடன் குளிர் சாதன வசதிகள் இன்றி இயக்கப்பட வேண்டும்,  டீக்கடைகள் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் சமூக இடைவெளியுடன் செயல்பட வேண்டும்,

அனைத்து பொருட்கள் அத்தியாவசியமல்லாத பொருட்கள் ஆன்லைன் மூலம் பெறுவதற்கு அனுமதிக்கப்படும்,  வாடகை வாகனங்கள் டாக்சிகள் மற்றும் கேப்கள் டிரைவர்கள் மட்டுமல்லாமல்   3 பயணிகள்  செல்ல  அனுமதிக்கப்படும்,  ஆட்டோக்கள் டிரைவர் தவிர இரண்டு பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும்,  மீன் விற்பனைக்கடைகள்,  கோழிக்கறி மற்றும் மற்ற இறைச்சி கடைகள்  மற்றும் முட்டைக்கடைகள்  சமூக இடைவெளியடன் இயங்க அனுமதியளிக்கப்படும் என்று  தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி, மதுரை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் பரவை பஞ்சாயத்து மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு வரும் 31 ம்தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

திங்கள் முதல் 12 ம்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதன் பி்ன்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடரும்

சென்னை, மதுரை  செங்கல்பட்டு, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதுTrending Now: