முத்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வனிதா! அப்பாவுக்கும், புருஷனுக்கும் வித்தியாசம் இல்லையா? என விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்!

04-07-2020 07:48 AM

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இவர் கடந்த வாரம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்தன்று இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளிவந்தன. 

அந்த புகைப்படங்களுக்கு எதிராக, ஒரு அந்தரங்கமான விஷயத்தை இப்படியா வெளியிடுவது என வனிதா மீது விமர்சனம் எழுந்தது. அடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் முதல் மனைவி போலீசில் புகார் அளித்ததும் மேலும் அதிகமான பரபரப்பை ஏற்படுத்தியது. 

சொந்தமாக யுடியுப் சேனல் வைத்திருக்கும் வனிதா தனது திருமணம் பற்றி பின்னர் அந்த சேனலில் சில விளக்கங்களைக் கொடுத்தார்.


அதில், முத்த சர்ச்சைக்கு இன்று டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அவரது கணவர் பீட்டர் பால் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று,” என்ற 'தங்க மீன்கள்' பட வசனத்தைப் பதிவிட்டு முத்தசர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கு பதிலளித்த நெட்டிசன்கள் தந்தைக்கும், கணவனுக்கும் வித்தியாசம் இல்லையா? என பதிவிட்டு முத்தசர்ச்சையை மீண்டும் தொடங்கி உள்ளனர்.Trending Now: