இந்தியாவின் கரோனா தடுப்பு ஊசி எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்பட 12 இடங்களில் சோதனை

03-07-2020 12:42 PM

புதுடெல்லி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து தயாரித்துள்ள கரோனா வைரஸ் தடுப்பு ஊசி மருந்து சென்னையில் உள்ள காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் உள்பட 12 இடங்களில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சோதனைகள் வெற்றி பெற்றால் ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்: என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.,

இந்தப் பன்னிரண்டு மருத்துவமனைகளையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேர்வு செய்துள்ளது.

இந்திய வாக்சினுக்கு கோவாக்சின் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து சோதனைகளுக்கு முன்னுரிமை தந்து சோதனை திட்டத்தை நிறைவேற்றும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடிதம் ஒன்றின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 12 மருத்துவமனைகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த சோதனைகள்  ஜுலை 7ந்தேதி வாக்கில் துவங்க வேண்டும். தடுப்பு ஊசி சோதனை வெற்றி பெற்றால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி பொதுமக்களுக்கு தடுப்பு ஊசியைப ப்யன்படுத்தலாம்  என்று சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதையும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் கருத்திற்கொண்டு இன்றைய சூழ்நிலையை சுகாதார நெருக்கடி நிலையாக கருதி சோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

முதல் இந்திய கரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகள் நடைபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 12 மாநிலங்கள் விபரம்:

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரம், விசாகப்பட்டினம். ரோட்டாக், புதுடெல்லி, பாட்னா, கர்நாடக மாநிலம் பெல்காம், நாக்பூர், கோரக்பூர், தமிழ்நாட்டில் காட்டாங்குளத்தூர், ஹைதராபாத் ஆர்யா நகர், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் கோவா.Trending Now: