மகள் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் தல அஜித்! வைரல் வீடியோ!!

03-07-2020 12:26 PM

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது மகள் மேடையில் நடிப்பதை நடிகர்அஜித் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தில் ஹிட் அடிக்கும். அதே போல், குடும்ப வாழ்க்கையிலும் அஜித்தை அனைவரும் பாராட்டுவார்கள். மனைவி, குழந்தைகளுக்கு நேரம் செலவிட தவறமாட்டார். அந்த வகையில் தன்னுடைய மகள் அனோஷ்கா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வேடமிட்டு நடிப்பதை ஒரு ஓரத்தில் நின்று சாதாரண தந்தையாக பார்த்து ரசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Trending Now: