''நான் ஒன்னும் கர்ப்பமா இல்ல'' - பிரபல ஹீரோவின் மனைவி அதிரடி - அப்படி என்ன ஆச்சு ?

02-07-2020 01:52 PM

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 6 ஆம் கட்டமாக அறிவிக்கப்பட் ஊரடங்கு குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவை ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 'கேஜிஎஃப்' பட ஹீரோ யஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.

அதில், ''கர்நாடகா அரசு புது லாக்டவுன் நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது. எதுக்கென்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வரவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு. எப்படியோ மனைவிகளின் கட்டுப்பாடுகள் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவுகிறது'' என்று தெரிவித்திருந்தார்.

அவரது பதிவு ரசிகர்களிடையே வைரலானது. இதனிடையே அவரது மனைவி ராதிகா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் உலா வரத்துவங்கியது. இந்நிலையில் ''நீ என்னுடைய கட்டுப்பாடுகளை ஒரு குடிமகனை போல் கடைபிடிக்கிறாய். மேலும் இது சிக்னல்னு நிறைய பேர் நினைக்கிறார்கள். இல்லை. நான் கர்ப்பமாக இல்லை'' என பதிலளித்துள்ளார்.Trending Now: