திருப்பூருக்கு சீனாவிலிருந்து வந்த இறக்குமதிப் பொருள்கள் முடக்கம்: தொழில்முனைவோர் அவதி

02-07-2020 01:22 PM

சென்னை

திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் முடக்கப்பட்டுள்ளன. அதனால் திருப்பூர் ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் பெரிதும் நெருக்கடியில் சிக்கி உள்ளன.

திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதி ஆடைகளுக்கு தேவையான பட்டன்கள், ஜீப்புகள் மற்றும் தங்கள் நிறுவன தயாரிப்பு என்பதை தெளிவு படுத்துவதற்கான லேபிள்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது வழக்கம். அதன்படி சீனாவிலிருந்து பின்னலாடை நிறுவனங்களுக்கான பட்டன்கள், ட்ரவுசர் மற்றும் தேவையான ஜிப்புகள், நைட்டி போன்றவைகளுக்கு தேவையான நூல் வேலைப்பாடுகளைக் கொண்ட பட்டைகள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. நிறுவனங்கள் அவற்றை திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு சென்னை துறைமுகங்கள் வழியாகவும் சென்னை விமான நிலையம் பெங்களூரு விமான நிலையம் வழியாகவும் அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு சீனாவிலிருந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்காக வந்த பட்டன்கள், சீட்டுகள், நூல் வேலைப்பாடுகள் கொண்ட பட்டைகள் ஆகியவை அடங்கிய கண்டைனர்கள் சென்னை துறைமுகங்களிலும் சென்னை பெங்களூரு விமான நிலையங்களிலும் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான இறக்குமதி தீர்வையும் சம்பந்தப்பட்ட திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் பிரதிநிதிகள் செலுத்தி விட்டனர். ஆனால் பொருள்களை எடுத்துச் செல்ல சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.

ஏன் இவற்றை தொழில் நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு துறைமுகங்களிலும் விமான நிலையங்களிலும் உள்ள எந்த சுங்கத்துறை அதிகாரிகள் பதில் தரவில்லை.

இந்தப் பிரச்சினை குறித்து மத்திய தொழில் வர்த்தக அமைச்சர், மத்திய நிதியமைச்சர், மத்திய துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆகியோருக்கு புகார்களை திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ராஜா எம் சண்முகம் அனுப்பியுள்ளார் அந்த கடிதங்களுக்கும் பதில் இதுவரை கிடைக்கவில்லை.

கரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையில் பெறப்பட்டு பெறப்பட்ட இந்த ஏற்றுமதி ஆர்டர்களை நிறைவேற்ற தாமதம் ஆனதால் இந்த பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் வெளிநாட்டிலுள்ள இறக்குமதியாளர்கள் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்று பட்டியல் இட்டு விடுவார்கள்.

எல்லா வேலைகளும் முடிந்த நிலையில் பட்டன்களை படுத்துவதற்கும் லேபிள் பொருத்துவதற்கு, வைப்பதற்கும் அழகுபடுத்தும் தையல் வேலைப்பாடுகளை தைப்பதற்குமாக ஏற்றுமதி ஆடைகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

தேவையான பட்டன்கள் லேபிள்கள் ஜிப்புகள் வந்து சேர தாமதமானால், இறுதி ஆக்கப்பட்ட ஏற்றுமதி ஆடைகளை கப்பல்களில் அனுப்ப இயலாது, விமானத்தில் அனுப்பினால்தான் உரிய நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும். விமானத்தில் அனுப்புவது என்றால் கூடுதல் செலவாகும் எனவே கூடுதல் செலவு ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும்.

எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சீனாவில் இருந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட பொருள்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிவிக்கப்படாமல் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் அமல்படுத்துகின்ற முடக்கத்தால் நமது தொழில் நிறுவனங்கள் தான் பாதிக்கப்படும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்தார்.

சென்னை துறைமுகத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் அடங்கிய கண்டவர்கள் ஏற்கனவே ஒரு கப்பலில் இருந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து வரும் மற்றொரு கப்பல் இப்பொழுது சென்னை துறைமுகம் வரும் வழியில் உள்ளது அந்த கப்பலும் வந்துவிட்டால் அந்த கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண்டவர்களும் சென்னை துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும். கரோனா வைரஸ் ஏற்கனவே தொழில் நிறுவனங்களை கொன்றுவிட்டது அதிலிருந்து தப்பிக்க பின்னலாடை நிறுவனங்கள் கடும் முயற்சி செய்து வருகின்றன இப்பொழுது அறிவிக்கப்படாத இறக்குமதி முடக்கம் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களின் குரல் வளையை நெரித்தது என்று திருப்பூர் பின்னலாடை நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி தெரிவித்தார்.

கருணா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிப்பதற்காக மருத்துவர்கள் செவிலியர்கள் ஆய்வக நிபுணர்கள் மருத்துவமனை ஊழியர்கள் அணிவதற்கான முழு உடல் கவச உடைகள் தயாரிப்பதற்கான பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கவச ஆடைக்கான ரசாயன துணியை குறிப்பிட்ட வடிவில் வெட்டுவதற்கான கட்டிங் மெஷின் இப்பொழுது துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன அதனால் மருத்துவர்கள் செவிலியர்கள் முழு கவச உடைகள் தயாரிப்பு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்தப் கவச உடை காண பொருள்களை இறக்குமதி செய்த ஆர். சண்முகநாதன் என்பவர் தெரிவித்தார்.

 திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் ரூபாய் 55 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆயத்த ஆடைகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றுக்கான பட்டன்கள் ஜீப்புகள் லேபிள்கள் ஆகியவற்றை பொருத்தாமல் அவற்றை அனுப்ப முடியாது என்பதால் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.Trending Now: