தன் குடும்பத்தை மிகவும் டார்ச்சர் செய்கிறார்கள், தமிழக முதல்வரிடம் உதவி கோரிய காமெடி நடிகர் டேனி!

30-06-2020 07:11 AM

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, உள்பட பல தமிழ்ப் திரைபடங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் டேனி. பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். 

இந்நிலையில்  காதலியை திருமணம் செய்திருந்த டேனி தம்பதிக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனை தன்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த டேனி சில மணி நேரங்களிலேயே, சுகாதாரத்துறை அமைச்சரையும் டேக் செய்து வெளியிட்டுள்ள ஒரு பதிவில், 'வளசரவாக்கம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் தங்களுடைய குடும்பத்தை மிகவும் டார்ச்சர் செய்து வருவதாகவும், அவர்கள் மிகவும் மோசமாக தங்களிடம் நடந்து கொள்வதாகவும் இதனால் தங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும்' அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்

மேலும் இந்தப் பிரச்சினையில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் உடனடியாக உதவி தேவை என்றும் அவர் கோரியுள்ளார்.Trending Now: