டிஜிட்டல் திரையில் அதிகபட்ச பார்வைகள் பெற்ற ராம்கோபால் வர்மாவின் 22 நிமிட ஆபாச திரைப்படம்!

28-06-2020 08:16 AM

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆரம்பித்து இப்போது வரை நேரடியாக இணையதளத்திற்கு படத்தை வெளியிடுவதை ஆரம்பித்தார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. 

இந்த மாதத் துவக்கத்தில் 'கிளைமாக்ஸ்' என்ற ஆபாசப் படத்தை வெளியிட்டார். அப்படத்தைப் பார்க்க 100 ரூபாய் கட்டணம் வசூலித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது 'நேக்டு நங்கா நக்னம்' என்ற ஆபாசப் படத்தை வெளியிட்டார்.

இந்தப் படத்திற்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்தப் படத்தைப் பற்றி அறிமுகப்படுத்தியதிலிருந்தே கூறி வந்தார். ஆனால்,  அது வெறும் 22 நிமிடப் படம் எனக் கூறியிருக்கிறார்.

மேலும், அந்தப் படத்திற்காக வெளியிடப்படும் போஸ்டர்கள் அனைத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் ஆபாசமாக இருந்தன என ரசிகர்கள் முகம் சுளித்தனர்.

இருப்பினும் அந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி தற்போது டிஜிட்டல் திரையுலகில் அதிக பட்ச விவ்ஸ் கொண்ட திரைப்படமாக கூறப்பட்டு வருகிறது.Trending Now: