அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே ஓவியம் வரைய வைத்த சபரிமலை பெண் போராளி.

24-06-2020 09:05 PM

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று போராடிய பெண் போராளி ஒருவர் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே தனது உடம்பில் பெயிண்டிங் வரைய செய்ததற்காக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் ஆவேசமாக போராட்டம் செய்து ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றவர் ரெஹானா பாத்திமா. இவர் சமீபத்தில் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில் ரெஹானா அரைநிர்வாண நிலையில் படுத்திருக்கின்றார். அவருடைய உடம்பில் அவருடைய இரண்டு குழந்தைகள் பெயிண்டிங் வரைவது போல் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதற்காக ரெஹானா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.


இந்த நிலையில் பத்தனம்திட்டா மாவட்ட போலீசார் இதுகுறித்து ரெஹானா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Trending Now: