திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

03-06-2020 05:19 PM

சென்னை,

திமுக பொருளாளராக துரைமுருகன்  நீடிப்பார்.   என்று திமுக   தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியி்ட்ட அறிவிப்பு

கொடிய நோயான கொரோனா அச்சுறுத்தும் நேரத்தில், திமுக சட்ட விதி:17யை பயன்படுத்தி பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் - பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாதஅசாதாரண சூழ்நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அப் பொதுக்குழு கூடும் வரையில் திமுக சட்ட விதி:18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்து, அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் எனஅறிவிக்கிறேன். 

இவ்வாறு, மு,க. ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார், Trending Now: