கொரோனா வைரஸ் தடுப்பில் சென்னை மாநகர மக்கள் அரசு விதிமுறைகளை கடைபிடிக்க முதலமைச்சர் வேண்டுகோள்

03-06-2020 10:13 AM

சென்னை

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பில் சென்னை மாநகர மக்கள் தமிழக அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னையில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில்,  அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையின் பொறுப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன், சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்று காலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  டுவிட்டரில் பேசியுள்ளார். அதன் விபரம்:

சென்னை மாநகர மக்களுக்கு அன்பான வேண்டுகோள்.

தமிழகம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும்,

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகக் காணப்படுகிறது.

சென்னை மாநகர மக்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி முறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வெளியில் செல்லும் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.

பொருட்களை வாங்கியப் பிறகு கண்டிப்பாக சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

வெளியில் சென்று வீடு திரும்பிய பின்னர் கை, கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் பயன்படுத்தும் கழிப்பறையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இதை நீங்கள் முறையாகக் கடைப்பிடித்தால், சென்னை மாநகரத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க முடியும்.

பொதுமக்கள் அனைவரும் வைரஸ் நோய் தொற்றை தடுப்பதில் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை டுவிட்டரில் பேசியுள்ளார்.

இன்று, சென்னை மாநகரில் கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,585ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்னையில் மட்டும் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர்.

Trending Now: