கமல் உடனான உறவு பற்றி பூஜா குமார்

27-05-2020 02:10 PM

இந்தியன் 2க்கு பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படும் இதில் ரேவதி, பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பதாக செய்தி வெளியானது. இதுப்பற்றி ஒரு பேட்டியில், ''தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க கேட்டு என்னை யாரும் அணுகவில்லை. யாருக்கு தெரியும் ஒருவேளை வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என கூறியுள்ளார் பூஜா குமார்.

மேலும் அதே பேட்டியில் கமல் உடனான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்த பூஜா, ''கமலையும் அவரது குடும்பத்தாரையும் எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும், அவருடன் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே அவரது குடும்பத்துடன் நல்ல பழக்கம் இருகுக்கிறது. அவரது அண்ணன் தயாரிப்பாளர் தொடங்கி, மகள்கள் வரை எல்லோரையும் தெரியும். அந்த அடிப்படையில் அவரது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றேன்'' என்றார்.

கமல் உடன் தொடர்ச்சியாக விஸ்வரூபம்(1, 2) மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்தவர் பூஜா குமார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கமலின் இல்ல விழா நிகழ்ச்சியில் நடிகைகளில் இவர் ஒருவர் மட்டுமே பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Trending Now: