ஜூன் 15 ம்தேதி வரை ஊரடங்கை தொடர நிபுணர் குழுவிடம் முதலமைச்சர் ஆலோசனை

26-05-2020 07:28 PM

சென்னை, 

மருத்துவ நிபுணர் குழுவினரிடம் முதலமைச்ச எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் விரிவான ஆலோசனை நடத்தினார், இந்த ஆலோசனையில் மேலும்  ஜூன் 15 ம்தேதி வரை பொது ஊரடங்கை நீடிக்கும்படி நிபுணர் குழுவினர் யோசனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது

முதலமைச்சர்  பழனிசாமி ஆலோசனை

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் முதலமைச்சர் எடப்பாடி . பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நான்காவது முறையாக காணொலிக் காட்சி மூலமாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்து செல்லும் நோக்கத்தோடு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நோய்க்கட்டுப்படுத்தல் முறை

இக்கூட்டத்தில் கீழ்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய புதியஉத்திகள் மருத்துவ சிகிச்சை குறித்த வழிமுறைகள் / நெறிமுறைகள் இறப்புகளை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள்நோய்த் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்.தேவைக்கேற்ப மருத்துவ வசதிகள், கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்.மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்து தமிழ்நாட்டில் குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்ச பழனிசாமி  அறிவுறுத்தினார்

அமைச்சர் விஜயபாஸ்கர் , அதிகாரிகள்

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் . க.சண்முகம்., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் சென்னை மாநகராட்சி ஆணையர் . பிரகாஷ், ஆகியோரும், ஜெனிவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், ஈரோட்டிலிருந்து இந்திய மருத்துவ கழக தலைவர்டாக்டர் சி.என். ராஜா, வேலூரிலிருந்து கிருத்துவ மருத்துவ கல்லூரி இயக்குநர்டாக்டர் ஜெ.வி. பீட்டர் ஆகியோர் காணொலி காட்சி மூலமாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானியும், சென்னை, தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநருமான டாக்டர் ப்ரப்தீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டல குழுத் தலைவர் டாக்டர் கே.என். அருண் குமார், தொற்றுநோய்தடுப்பு நிபுணர் டாக்டர் பி. குகானந்தம், அப்பல்லோ மருத்துவமனையின் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் வி. ராமசுப்பிரமணியம், சென்னை மருத்துவக் கல்லூரியின்பேராசிரியர் டாக்டர் ரகுநந்தன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநர்டாக்டர் தி.சி. செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

செளமியா சுவாமி நாதன் அறிவுரை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் வீடியோகான்பரன்சிங் மூலம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி செளமியா சுவாமி நாதன், வெளிநாடுகள் வெளிமாநில போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பரவல் எண்ணிக்கை ஒரு சவாலாக இருப்பதாகவும் சென்னையில் நோய்த்தொற்று அதிகமாக இருப்பதாலும் மற்ற மாவட்டங்களில் தொற்று அபாயம் இருப்பதாலும் இப்போதைக்கு பொது போக்குவரத்தை அனுமதிக்க வேண்டாம் என்றும் ஊரடங்கில் இனி தளர்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது எனவே இப்போதைய சூழ்நிலையில் வரும் ஜூன் 15 ம்தேதி வரை ஐந்தாவதாக ஊரடங்கு நீடிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மே 30 ம்தேதி வெளியிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் தமிழ்நாட்டில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது தொடர்பாக நிபுணர் குழுவினர் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது,ஊரடங்கிற்கு பின்னர் மதுபான கடைகள் திறந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது,

நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்க வாய்ப்புகள் இல்லை என்றும் கோவில்கள் தியேட்டர்கள், பொது விழாக்கள் குறித்து ஏற்கனவே இருந்த நிலை தொடரும் என்று கூறப்படுகிறது,

ஆகஸ்ட்டில் பள்ளிகள் திறப்பு

 மருத்துவர்கள் குழுவை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார், இந்த ஆலோசனையின் போது வரும் ஜூன் 15 ம்தேதி நடைபெற இருக்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து விரிவான விவாதிக்கப்பட்டது,  இதில் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள், போக்குவரத்து வசதிகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை காலையிலும் 

9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பிற்பகலிலும் பாடங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது,Trending Now: