பலமுறை விழுந்து விட்டேன்... யாரும் தனியாக செய்ய வேண்டாம் - தமன்னா

23-05-2020 07:31 AM

கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்

இந்த நிலையில் நடிகை தமன்னா  தலைகீழாக நிற்க முயற்சிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அவர் ஒரு சிறந்த பயிற்சியாளரின் உதவியுடன் தலையை தரையில் வைத்து, காலை தானாகவே மேலே தூக்குகிறார். எந்தவித உதவியும் இன்றி அவர் தலைகீழாக நிற்கும் அந்த வீடியோ பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த வீடியோ குறித்து அவர் கூறியபோது ‘ஒரு சில தோல்விகள் மற்றும் வீழ்ச்சிகளுக்கு அப்புறமே வெற்றி கிடைக்கும் என்பது இதன் மூலம் தெரிந்து கொண்டேன். தலைகீழா நிற்பதற்கு முன் நானும் பலமுறை விழுந்து விட்டேன். ஆனாலும் விடாமுயற்சியால் ஒரு முறை வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால் தயவுசெய்து இதனை யாரும் பயிற்சியாளர் இல்லாமல் தனியாக செய்ய வேண்டாம் என்று தமன்னா கேட்டுக்கொண்டுள்ளார்.Trending Now: