நாளுக்கு நாள் கிரணின் கவர்ச்சி அட்ராசிட்டி தாங்க முடியலைடா சாமீ!

22-05-2020 12:45 PM

 விக்ரமின் ஜெமினி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டனின் உறவினரான கிரண். கொழுக் மொழுக் என்றிருந்த கிரணை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கித் தான் போனார்கள். அடுத்ததாக அஜித்துடன் சேர்ந்து வில்லன் படத்தில் நடித்தார். மூன்றாவது படத்திலேயே உலக நாயகன் கமல் ஹாஸன் ஜோடியானார். வின்னர் படத்தில் பிரசாந்துடன் ஜோடி சேர்ந்தார் கிரண்.

விஜய்யின் திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. எஸ்.ஜே. சூர்யாவின் நியூ படத்தில் ரசிகர்களை கவர்ந்தார். அப்படியே தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

40 வயதாகும் கிரண் அம்மா வேடங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். விஷாலின் ஆம்பள படத்தில் அவருக்கு அத்தையாக நடித்தார். படத்தில் தான் அத்தை, அம்மா கதாபாத்திரம் எல்லாம். ட்விட்டரில் பார்த்தால் கிரண் வேறு மாதிரி இருக்கிறார். 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாலும் பிறப்பித்தார்கள் இந்த கிரண் ட்விட்டரில் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை  டுவிட்டரே கதி என்று இருக்கிறார் கிரண்.  தினமும் கவர்ச்சியான உடை அணிந்து விதவிதமாக புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் வெளியிடுகிறார்.Trending Now: