வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்களுக்கு சலுகை நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

22-05-2020 10:57 AM

புதுதில்லி

வங்கிக் கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கான சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு மே 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில்,

வீடு, வாகனம், உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணையை செலுத்துவதற்கான சலுகை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அறிவித்தார்.

ஏற்கனவே கடன்களுக்கான மாத தவணையை செலுத்த மார்ச், ஏப்ரல், மே என 3 மாதங்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.Trending Now: