இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பலி எண்ணிக்கை 3,538ஆக உயர்ந்துள்ளது

22-05-2020 10:00 AM

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று நோய் பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை 3,583  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 118,447ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா வைரஸ்  பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 148 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 3,583 ஆக உயர்வடைந்து உள்ளது. 

48 ஆயிரத்து 534 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து உள்ளனர்.

66 ஆயிரத்து 330 பேர் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 118,447 ஆக உயர்வடைந்து உள்ளது.


மகாராஷ்டிரா மநிலத்தில் – 41,642 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,454 பேர் உயிரிழந்து உள்ளனர்.

குஜராத்தில் – 12,905 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 773 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டெல்லியில் – 11,659 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் – 6,227 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 151 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் – 5,981 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 270 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் – 5,515 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 138 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஆந்திராவில் – 2,647 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தெலங்கானாவில் – 1,699 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் – 13,967 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கேரளாவில் – 690 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் – 1,605 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் – 3,197 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 259 பேர் உயிரிழந்து உள்ளனர்.Trending Now: